பக்கம் எண் :

தலைவரும் விழும நிலையெடுத்து உரைப்பினும் சூ.42289

(இ-ள்)  தலைவரும்  விழும................தோழிமேன-தலைவரும்  விழும நிலையெடுத்  துரைத்தல் முதலாகச்
சொல்லப்பட்டன தோழிமாட்டுப் பொருந்தித் தோன்றும்.2
  

தலைவரும்   விழுமநிலை   எடுத்துரைத்தலாவது  பின்பு  வரும்  நோய்  நிலையை   எடுத்துக்கூறுதல்
என்றவாறு.
  

“பாஅல் அஞ்செவிப் பணைத்தாள் மாநிரை
மாஅல் யானையொடு மறவர் மயங்கித்
தூறதர்ப் பட்ட ஆறுமயங் கருஞ்சுரம்
இறந்துநீர் செய்யும் பொருளினும் யாம்நுமக்குச்
சிறந்தனம் ஆதல் அறிந்தனிர் ஆயின்
நீள்இரு முந்நீர் வளிகலன் வௌவலின்
ஆள்வினைக்கு அழிந்தோர் போறல் அல்லதைக்
கேள்பெருந் தகையோடு எவன்பல மொழிகுவம்
நாளுங் கோள்மீன் தகைத்தலுந் தகைமே;
கல்லெனக் கவின்பெற்ற விழவாற்றுப் படுத்தபின்
புல்லென்ற களம்போலப் புலம்புகொண்டு அமைவாளோ;
ஆள்பவர் கலக்குற அலைபெற்ற நாடுபோல்
பாழ்பட்ட முகத்தொடு பைதல்கொண்டு அமைவாளோ;
ஓரிரா வைகலுள் தாமரைப் பொய்கையுள்
நீர்நீத்த மலர்போல நீநீப்பின் வாழ்வாளோ;
என வாங்கு,
பொய்ந்நல்கல் புரிந்தனை புறந்தரல் கைவிட்டு
எந்நாளோ நெடுந்தகாய் நீ செல்வது
அந்நாள்கொண் இறக்கும்இவள் அரும்பெறல் உயிரே.”  

(கலி.பாலை-2)
  


1. உடன் போக்காகிய பிரிவின்கண்ணும் பொருள் வயிற்பிரிவின் கண்ணும்.  

2. ‘ஒன்றித்தோன்றும்  தோழிமேன’  என்பதைத்  தோழிமேன   ஒன்றித்தோன்றும்   எனமாற்றி எழுதிய
இவர் முடிவில் ஒன்றித்தோன்றும் தோழி என்றே கூறுதல் மாறுபாடுடையதாம்