பக்கம் எண் :

290தொல்காப்பியம் - உரைவளம்

எனவரும்.     இதனுள் “யாம்  நுமக்குச்  சிறந்தனமாதல்  அறிந்தனிராயின்”   என்றமையாலும், “பொய்ந்
நல்கல்  புரிந்தனை”  என்றமையாலும்  வரைவதன்  முன்பென்று     கொள்ளப்படும். இவள் இறந்துபடும்
என்றமையால் உடன்கொண்டு போவது குறிப்பு3.
  

போக்கற்கண்ணும் என்பது ‘உடன் கொண்டு பெயர்’ என்று கூறுதற் கண்ணும் என்றவாறு.
  

“மரையா மரல் கவர மாரி வறப்ப
வரையோங்கு அருஞ் சுரத்து ஆரிடைச் செல்வோர்
சுரையம்பு மூழ்கச் சுருங்கிப் புரையோர்தம்
உண்ணீர் வறப்பப் புலாவாடு நாவிற்குத்
தண்ணீர் பெறாஅத் தடுமாற்று அருந்துயரம்
கண்ணீர் நனைக்குங் கடுமைய காடென்றால்
என்னீர் அறியாதீர் போல இவைகூறல்
நின்னீர அல்ல நெடுந்தகாய் எம்மையும்
அன்பறச் சூழாதே ஆற்றிடை நும்மொடு
துன்பந் துணையாக நாடின் அதுவல்லது
இன்பமும் உண்டோ வெமக்கு”  
  

  (கலி-பாலை-5)
 

எனவரும்4
  

விடுத்தற்கண்ணும்  என்பது  தலைமகன்  உடன்போக்கொருப்  பட்டமை தலை மகளுக்குக்கூறி அவளை
விடுத்தற் கண்ணும் என்றவாறு.
  

“உன்னங் கொள்கையொடு உளங்கரந்து உறையும்
அன்னை சொல்லும் உய்கம் என்னதூஉம்
ஈரஞ் சேரா இயல்பின் பொய்ம்மொழிச்
சேரியம் பெண்டிர் கவ்வையும் ஒழிகம்
நாடுகண் அகற்றிய உதியஞ் சேரல்
பாடிச் சென்ற பரிசிலர் போல
உவவினி வாழி தோழி அவரே
  


3. இச்செய்யுள் கற்பிற் பொருள்வயிற் பிரிதலுக்குரியதாகவும் ஆம்

4. தலைவிகூற் றென்பர் நச்சினார்க்கினியர் (கலி.நச்.உரை)