பொம்மல் ஒதி நம்மொடு ஒராங்குச் செலவயர்ந் தனரால் இன்றே மலைதொறும் மால்கழை பிசைந்த நூல்வாய் கூரெரி மீன்கொள் பரதவர் கொடுந்திமில் நளிசுடர் வான்றோய் புணரி மிசைக்கண் டாங்கு மேவரத் தோன்றும் யாஅஉயர் நனந்தலை உயவல் யானை வெரிநுச்சென் றன்ன கல்லூர்பு இழிதரும் புல்சாய் சிறுநெறிக் காடுமீக் கூறுங் கோடேந்து ஒருத்தல் ஆறுகடி கொள்ளும் அருஞ்சுரம் பணைத்தோள் நாறைங் கூந்தல் கொம்மை வரிமுலை நிரையிதழ் உண்கண் மகளிர்க்கு அரிய வாலென அழுங்கிய செலவே” |
(அகம்-65) |
எனவரும். இஃது உடன்போக்கு நயப்பித்தது.5 |
“வேலும் விளங்கின வினைஞரும் இயன்றனர் தாருந் ததையின தழையுந் தொடுத்தன நிலநீர் அற்ற வெம்மை நீங்கப் பெயல் நீர் தலைஇய உலவையிலை நீத்துக் குறுமுறி யீன்றன மரனே நறுமலர் வேய்ந்தன போலத் தோன்றிப் பலவுடன் தேம்படப் பொதுளின பொழிலே கானமும் நனிநன் றாகிய பனிநீங்கு வழிநாள் பாலெனப் பரத்தரு நிலவின் மாலைப் போதுவந் தன்றுதூதே நீயும் கலங்கா மனத்தை ஆகி என்சொல் நயந்தனை கொண்மோ நெஞ்சமர் தகுவி தெற்றி உலறினும் வயலை வாடினும் நொச்சி மென்சினை வணர்குரல் சாயினும் நின்னினும் மடவள் நனிநின் நயந்த அன்னை அல்லல் தாங்கிநின் ஐயர் புலிமருள் செம்மல் நோக்கி வலியாய் இன்னுந் தோய்கநின் முலையே.” |
(அகம்-259) |
எனவரும். இது விடுத்தவழிக் கூறியது. |
5 நயப்பித்தது - விரும்பி ஒருப்படச் செய்தது. ஒருபடச் செய்வதும் விடுத்தலாகும் என்பது இவர் கருத்து. அடுத்த உதாரணம் விடுத்தற்குரியது. |