“எனவாங்கு; இனைநலம் உடைய கானஞ் சென்றோர் புனைநலம் வாட்டுநர் அல்லர் மனைவயின் பல்லியும் பாங்கொத்து இசைத்தன நல்எழில் உண்கணும் ஆடுமால் இடனே.”1 |
(கலி-பாலை-11) |
என வற்புறுத்தியவாறு கண்டு கொள்க. |
‘என்றிவை எல்லாம் இயல்புற நாடின்’ என்றதனான், பருவம் வந்தது எனவும் பருவம் அன்று எனவும் வருவன கொள்க. |
“வல்வருவர் காணாய் வயங்கி முருக்கெல்லாம் செல்வச் சிறார்க்குப்பொன் கொல்லார்போல்-நல்ல பவளக் கொழுந்தின்மேற் பொற்றாலி பாய்த்தித் திவளக்கான் றிட்டன தேர்ந்து” |
(திணைமாலைநூற்-66) |
இது பருவம் வந்தது என்றது; |
“மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை கல்பிறங்கு அத்தஞ் சென்றோர் கூறிய பருவம் வாரா அளவை நெறிதரக் கொம்புசேர் கொடியிணர் ஊழ்த்த வம்ப மாரியைக் காரென மதித்தே.” |
(குறுந் 66)
|
இது பருவம் அன்று என்றது. |
இன்னும் ‘என்றிவை எல்லாம்’ என்றதனால், பிரியுங்காலத்துத் தலைமகட்கு உணர்த்துகின்றேன் எனத் தலைமகற்கு உரைத்தலும், தலைமகட்கு அவர் பிரியார் எனக் கூறுதலும் கொள்க. |
“முளவுமா வல்சி எயினர் தங்கை இளமா எயிற்றிக்கு நின்நிலை அறியச் சொல்லினேன் இரக்கும் அளவை வென்வேல் காளை விரையா தீமே.” |
(ஐங்குறு-364)
|
இது விலக்கிற்று. |
“விலங்கல் விளங்கிழாஅய் செல்வாரோ அல்லர் அழற்பட் டசைந்த பிடியை-எழிற்களிறு |
1 இதனைத் தலைவி கூற்றென்பர் நச்சினார்க்கினியர் |