பக்கம் எண் :

296தொல்காப்பியம் - உரைவளம்

கற்சுனைச் சேற்றிடைச் சின்னீரைக் கையாற் கொண்டு
உச்சி யொழுக்குஞ் சுரம்.”
  

(ஐந்திணை ஐம்-32)

இது தலைமகட்குக் கூறியது.
  

நச்சினார்க்கினியர்
  

 42. தலைவரு... ... ... தோழிமேன
 

தாயர்க்கு உரியனகூறி இது தோழிக்குக் கூற்று நிகழுமாறு கூறுகின்றது.
  

(இ-ள்)   தலைவரும் விழும நிலைஎடுத்து உரைப்பினும் - தலைவன் கொண்டு  தலைக்கழியாவிடிற்றலை
விக்கட்டோன்றுந்  துன்ப   நிலையத்தலைவற்குந்   தலைவிக்கும் விளங்கக்கூறினும்;  போக்கற் கண்ணும் -
அதுகேட்டு   இருவரும்    போக்கொருப்   பட்டுழித்   தலைவியைப்   போகவிடும்  இடத்தும்; விடுத்தற்
கண்ணும்-தலைவியை   அவனோடு   கூட்டி   விடுக்குங்காற்றலைவிற்குப்   பாதுகாவலாகக்கூறும் இடத்தும்;
நீக்கலின்  வந்த   தம்  உறு   விழுமமும்-தாயரை  நீக்குதலாற் றமக்குற்ற  வருத்தத்திடத்தும்; வாய்மையும்
பொய்ம்மையும்  கண்டோர்ச்   சுட்டித்   தாய்நிலை   நோக்கித்   தலைபெயர்த்துக் கொளினும் - மெய்யும்
பொய்யும்  உணர்ந்த   அறிவரது   தருமநூற் றுணிபும்  இதுவெனக்  கூறிப்பின் சென்று அவரை மீட்டற்கு
நினைந்த  தாயரது  நிலைமை   அறிந்து  அவரை   மீளாதபடி   அவளை  மீட்டுக்கொளினும்; நோய்மிகப்
பெருகித் தன் நெஞ்சு கலுழ்ந்தோளை அழிந்தது  களைஇய ஒழிந்தது கூறி  வன்புறை நெருங்கி  வந்த  தன்
திறத்தோடு  தலைவி   போக்கு  நினைந்து  நெஞ்சு  மிகப்  புண்ணுற்றுத்  தடுமாறுந்தாயை  அவ்வருத்தந்
தீர்த்தல்  வேண்டி   உழுவலன்பு   காரணத்தாற்  பிரிந்தாளென்பது  உணரக்கூறி  அவளை நெருங்கிவந்து
ஆற்றுவித்தற்  கூற்றோடே;   என்று   இவையெல்லாம்  இயல்புற  நாடின்  ஒன்றித்   தோன்றும்  தோழி
மேன-என்று  இச்சொல்லப்பட்டன  எல்லாவற்றுக்கண்ணும் இலக்கண  வகையான்  ஆராயுங் காலத்துத்தான்
அவள் என்னும் வேற்றுமையின்றி ஒன்றுபடத் தோன்றும் தோழி மேன கிளவி என்றவாறு.