பக்கம் எண் :

தலைவரும் விழும நிலையெடுத்து உரைப்பினும் சூ.42297

“வெல்போர்க் குரிசினீ வியன்சுர னிவப்பிற்
பல்கா ழல்கு லவ்வரி வாடக்
குழலினு மினைகுவள் பெரிதே
விழவொலி கூந்தனின் மாஅ யோளே.”
  

(ஐங்குறு-306)
 

இவ்  வைங்குறுநூற்றுட்  குழலினும்  இரங்குவளென்று  பிரிந்தவள்  இரங்குதற்  பொருள்படத்  தோழி
தலைவரும் விழுமந் தலைவற்குக் கூறினாள்.1
  

“உன்னங் கொள்கையோ டுளங்கரந் துறையும்
அன்னை சொல்லும் உய்கம் என்னதூஉம்
ஈரஞ் சேரா இயல்பின் பொய்ம்மொழிச்
சேரியம் பெண்டிர் கௌவையும் ஒழிகம்
நாடுகண் அகற்றிய உதியஞ் சேரன்
பாடிச் சென்ற பரிசிலர் போல
உலவினி வாழி தோழி யவரே
பொம்மல் ஒதி நம்மொ டொராங்குச்
செலவயர்ந்த தனரால் இன்றே மலைதொறும்
மால் கழை பிசைந்த கால்வாய் கூரெரி
மீன்கொள் பரதவர் கொடுந்திமி னளிசுடர்
வான்தோய் புணரி மிசைக்கண் டாங்கு
மேவரத் தோன்றும் யாஉயர் நனந்தலை
உயவல் யானை வெரிநுச்சென் றன்ன
கல்லூர் பிழிதரும் புல்சாய் சிறுநெறிக்
காடுமீக் கூறுங் கோடேந் தொருத்தல்
ஆறுகடி கொள்ளு மருஞ்சுரம் பணைத்தோள்
நாறைங் கூந்தற் கொம்மை வரிமுலை
நிறையிதழ் உண்கண் மகளிர்க்கு
அரிய வாலென அமுங்கிய செலவே.”  

(அகம்-65)
 

இதனுள் அன்னை சொல்லும் பெண்டிர் கௌவையுந்  தலை வரும் விழுமமென்று  தலைவிக்குக்
கூறினான்.
  

இனிப் போக்கற்கட் கூறுவன பலவுமுள.   


1 இச்செய்யுளில் கொண்டு தலைக் கழிதற்குறிப்பேயில்லை. பிறபிரிவுகட்குரியதாகவே உள்ளது.