“இலங்குவீங் கெல்வளை யாய்நுதல் கவின்பெறப் பொலந்தேர்க் கொண்கனும் வந்தன னினியே யிலங்கரி நெடுங்க ணனந்த றீர்மதி நலங்கவர் பசலையை நகுகம் யாமே.” |
(ஐங்குறு 200) |
இவ் வைங்குறுநூற்றில், கண் அனந்தறீர் என்றதனானே உடன்கொண்டு போதற்கு வந்தானெனப் பாயலுணர்த்திக்2 கூறிற்று. |
“வேலும் விளங்கின வினைஞரு மியன்றனர் தாருந் தையின தழையுந் தொடுத்தன நிலநீ ரற்ற வெம்மை நீங்கப் பெயனீர் தலைஇ உலவையிலை நீத்துக் குறுமுறி யீன்றன மரனே நறுமலர் வேய்ந்தன போலத் தோன்றிப் பலவுடன் தேம்படப் பொதுளின பொழிலே கானமும் நனிநன் றாகிய பனிநீங்கு வழிநாட் பாலெனப் பரத்தரு நிலவின் மாலைப் போது வந்தன்று தூதே நீயும் கலங்கா மனத்தை யாகி யென்சொல் நயந்தனை கொண்மோ நெஞ்சமர் தகுவி தெற்றி யுலறினும் வயலை வாடினும் நொச்சி பென்சினை வணர்குரல் சாயினும் நின்னினும் மடவள் நனிநின் யைந்த அன்னையல்லல் தாங்கிநின் னையர் புலிமருள் செம்மல் நோக்கி வலியாய் இன்னுந் தோய்கநின் முலையே.” |
(அகம்-250)
|
இவ்வகம் போக்குதற்கண் முயங்கிக் கூறியது.3 |
“அண்ணாந் தேந்திய வனமுலை தளரினும் பொன்னேர் மேனி மணியிற் றாழ்ந்த நன்னெடுங் கூந்த னரையொடு முடிப்பினு நீத்த லோம்புமதி பூக்கே வின்கடுங் கள்ளி னிழையணி கொடித்தேர்க் |
2 பாயலுணர்த்துதல் - துயிலுணர்த்துதல் (எழுப்புதல்) |
3 தலைவியைத் தழுவி தோழி கூறியது. |