பக்கம் எண் :

தலைவரும் விழும நிலையெடுத்து உரைப்பினும் சூ.42299

கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீஇயர்
வெண்கோட் டியானைப் பேஎர் கிழவோன்
பழையன் வேல்வாய்த் தன்னநின்
பிழையா நன்மொழி தேறிய விவட்கே.”

(நற்றிணை 10)

இந்நற்றிணை தலைவியைப் பாதுகாக்கவெனத் தோழி கைப்படுத்துவித்தது.
  

“புதல்வனீன்ற” (நற்றிணை-355) என்பதும் அது
 

“இவளே நின்னல திலளே யாயுங்
குவளை யுண்க ணிவளல திலளே
யானு மாயிடை யேனே
மாமலை நாட மறவா தீமே.”
 

இதுவும் அது
 

“விளம்பழங் கமழுங் கமஞ்சூற் குழிசி
பாசந் தின்ற தேய்கான் மத்த
நெய்தெரி யியக்கம் வெளின்முதன் முழங்கும்
வைகுமலர் விடியன் மெய்கரந்து தன்கா
லரியமை சிலம்பு கழீஇப் பன்மாண்
வரிபுனை பந்தொடு வைஇய செல்வோ
ளிவைகாண் டோறு நோவர் மாதோ
வளியரோ வளியரென் னாயத் தோரேன
நும்மொடு வரவுதா னயரவுந்
தன்வரைத் தன்றியுங் கலுழ்ந்தன கண்ணே.”

(நற்றிணை -12)

இந் நற்றிணை போக்குதல் தவிர்ந்ததாம்.
  

“அவளே யுடமை ராயமொ டோரை வேண்டாது
மடமான் பிணையின் மதர்த்த நோக்கமொ
டென்னினு நின்னினுஞ் சிறந்த மென்மொழி
யேதி லாளன் காதலி னானாது
பால்பாற் படுப்பச் சென்றன ளதனான்
முழவிமிழ் பந்தர் வினைபுனை நல்லில்
விழவயர்ந் திருப்பி னல்லதை யினியே
நீயெவ னிரங்குதி யன்னை
யாயினுஞ் சிறந்த நோய்முந் துறந்தே.”