திறத்தோடு” எனப் பாடங்கொண்டு, ‘மகட் பிரிவாற்றாது அரற்றும் தாயை அவள் வருத்தம் தீர்த்தல் கருதித் தலைவியும் தலைவனும் கூறியனவும் செய்தனவும் எடுத்துச் சொல்லி விரைவில் மீள்வாரென வற்புறுத்தித் தேற்றுங் கூற்றோடே” எனப் பொருள் கொள்ளுவது பொருந்துவதாகும். அதற்குச் செய்யுள்: |
“அன்னை வாழியோ அன்னை நின்மகள்” எனும் கீழ்வருஞ் செய்யுள் இதற்கு எடுத்துக்காட்டாகும். |
தலைவரும் விழுமநிலை எடுத்துரைத்தற்குச் செய்யுள்: |
“பொலம்பசும் பாண்டிற் காசுநிரை அல்குல் இலங்குவளை மென்றோள் இழைநிலை நெகிழப் பிரிதல் வல்லுவை யாயின் அரிதே விடலையிவள் ஆய்நுதற் கவினே.” |
(ஐங்-310)
|
இனித் தோழி தலைவற்குத் தலைவி விழுமம் கூறுதற்குச் செய்யுள்: |
‘பாஅல் அஞ்செவி’ எனும் பாலைக்கலியில், |
“பொய்ந்நல்கல் புரிந்தனை புறந்தரல் கைவிட் டெந்நாளே நெடுந்தகாய் நீசெல்வ தந்நாள் கொண் டிறக்குமிவ ளரும்பெற லுயிரே.” |
(பாலைக்கலி-5)
|
எனவரும் போக்கிய லுமதுவே. |
இனி, தோழி தலைவிக்குத் தலைவன் விழுமம் உரைத்தற்குச் செய்யுள் வருமாறு: |
“தினைகிளி கடிகெனிற் பகலும் ஒல்லும்; இரவுநீ வருதலின் ஊறும் அஞ்சுவல்; யாங்குச்செய் வாமென் னிடும்பை நோய்க்கென ஆங்குயான் கூறிய அனைத்திற்கும் பிறிதுசெத் தோங்குமலை நாடன் உயிர்த்தோன் மன்ற; ஐதே காமம்; யானே கழிமுதுக் குறைமையின் பழியுமென் றிசினே.” |
(குறு-217) |