பக்கம் எண் :

304தொல்காப்பியம் - உரைவளம்

போக்கற்கண் தோழி தலைவதற்குக் கூறியதற்குச் செய்யுள் வருமாறு:
  

“பெருநன் றாற்றிற் பேணாரு முளரே
ஒருநன் றுடைய ளாயினும் புரிமாண்டு
புலவி தீர வளிமதி, இலைகவர்
பாடமை யொழுகிய தண்ணறுஞ் சாரன்
மென்னடை மரையா துஞ்சு
நன்மலை நாட! நின்னல திலளே”    
  

(குறு-115)

“அண்ணாந்தேந்திய”   எனும்   நற்றிணை   10ஆம்   செய்யுளில்  ‘நன்னெடுங்  கூந்தல்  நரையொடு
முடிப்பினும் நீத்தல் ஒம்புமதி பூக்கேழூர’ என்பதும் போக்கற்கண் தோழி தலைவனுக்குக் கூறியதாகும்.
  

“இவளே நின்னல திலளே, யாயும்
குவளை யுன்கண் இவளல திலளே
யானு மாயிரை யேனே,
மாமலை நாட! மறவா தீமே.”
   

எனவரும் செய்யுளுமது.
  

தலைவனுடன் போக்கற்கண் தோழி தலைவிக்குக் கூறியதற்குச் செய்யுள்:
  

“ஊஉர் அலரெழச் சேரி கல்லென
ஆனா தலைக்கும் அறனில் அன்னை
தானே யிருக்க தன்மகள் யானே
நெல்லி தின்ற முள்ளெயிறு தயங்க
உணலாய்ந் திசினா லவரொடு சேய்நாட்டு
விண்தொட நிவந்த விளங்குமலைக் கவாஅற்
கரும்புநடு பாத்தி யன்ன
பெருங்களிற் றடிவழி நிலைஇய நீரே.”  

  

(குறு-262)

இது தலைவியொடு தன்னை ஒருப்படுத்துணருந் தோழி கூற்று.