பக்கம் எண் :

தலைவரும் விழும நிலையெடுத்து உரைப்பினும் சூ.42305

தலைவியைத் தலைவன் விட்டுப் பிரியுமிடத்துத் தோழி தலைவதற்குக் கூறியதற்குச் செய்யுள்:
  

“- - - - - - - - - - உமணர்ச்
சேர்ந்து கழிந்த மருங்கின் அகன்றலை
ஊர்பாழ்ந் தனை ஓமையம் பெருங்காடு
இன்னா வென்றீ ராயின்
இனியவோ பெரும தமியேற்கு மனையே”.
  

(குறு-124)

இதுவும் தன்னைத் தலைவிபோற் கூறும் தோழிகூற்று.
  

“மரையா மரல்கவர மாரி வறப்ப
வரையோங் கருஞ்சுரத் தாரிடைச் செல்வோர்
சுரையம்பு மூழ்கச் சுருங்கிப் புரையோர்தம்
உண்ணீர் வறப்பப் புலர்வாடு நாவிற்குத்
தண்ணீர் பெறாஅத் தடுமாற் றருந்துயரம்
கண்ணீர் நனைக்குங் கடுமைய காடென்றால்,
என்னீர் அறியாதீர்போல இவைகூறின்,
நின்னீர வல்ல நெடுந்தகா யெம்மையும்
அன்பறச் சூழாதே ஆற்றிடை நும்மொடு
துன்பந் துணையாக நாடி னதுவல்ல
தின்பமு முண்டோ எமக்கு.”   
  

 (கலி-6)

எனும் பாலைக் கலியுமது,
  

“ஒன்றில் காலை அன்றில் போலப்
புலம்புகொண் டுறையும் புன்கண் வாழ்க்கை
யானுமாற் றேனது தானும்வந் தன்று
நீங்கல் வாழி யரைய.............................”

 

எனும் நற்றிணைப் பாட்டும், தலைவி போற் கூறும் தோழி கூற்று
   

“மால்வெள் ளோத்திரத்து மையில் வாலிணர்
அருஞ்சுரம் செல்வோர் சென்னிக் கூட்டும்
அவ்வரை இறக்குவை யாயின்
மைவரை நாட வருந்துவள் பெரிதே.”
   

எனவரும் ஐங்குறு நூற்று 301 ஆம் செய்யுளுமது.
  

தோழி தலைவிக்குக் கூறியதற்குச் செய்யுள் வருமாறு:-
  

“நிலந்தொட்டுப் புகாஅர், வான மேறார்,
விலங்கிறா முந்நீர் காலிற் சொல்லார்,