பக்கம் எண் :

306தொல்காப்பியம் - உரைவளம்

நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்
குடிமுறை குடிமுறை தேரிற்
கெடுநரு முளரோநங் காதலோரே”
  

(குறு 130)

“பொன்செய் பாண்டிற் பொலங்கல நந்தத்
தேரக லல்குல் அவ்வரி வாட
இறந்தோர் மன்ற தாமே பிறங்குமலைப்
புல்லரை யோமை நீடிய
புலிவழங் கதர கானத்தானே.”

(ஐங்-316)

எனும் ஐங்குறு நூற்றுப் பாட்டு மதுவே.
  

நீங்கலின் வந்த தம்முறு விழுமம் தோழி கூறுதற்குச் செய்யுள்:
  

“அன்னை வாழியோ அன்னை நின்மகள்
என்னினும் யாயினும் நின்னினும் சிறந்த
தன்னமர் இளந்துணை மருட்டலின் முனாஅது
வென்வேற் புல்லி வேங்கட நெடுவரை
மழையொடு மிடைந்த வயக்கலிற் றருஞ்சுரம்
விழைவுடை உள்ளமொடு உழைவயிற் பிரியாது
வன்கண் செய்து சென்றனள்;
புன்கண் செய்தல் புரைவதோ அன்றே.”

  

தாய்நிலை நோக்கித் தலைப் பெயர்த்துக் கொளற்குச் செய்யுள்:
  

“புள்ளு மறியாப் பல்பழம் பழுநி
மடமான் அறியாத் தடநீர் நிலைஇச்
சுரநனி இனிய வாகுக வென்று
நினைத்தொறுங் கலுமு மென்னினும்
மிகப்பெரிது புலம்பின்று தோழிநம் மூரே”
  

(ஐங்-398)

அழிந்தது களையென மொழிந்தது கூறி வன்புறை நெருங்கித் தோழி கூறுவதற்குச் செய்யுள்:-
  

‘அரிதாய அறனெய்தி’ என்னும் பாலைக் கலியில்,
  

“கடியவே கணங்குழாய் காடென்றார், அக்காட்டுள்
பிடியூட்டிப் பின்னுண்ணும் களிறெனவும் உரைத்தனரோ”
  

(கலி-10)

என்பது போன்ற தலைவன் மொழிந்தவற்றை எடுத்துக்காட்டி’