“இனைநல முடைய கானஞ் சென்றோர் புனைநலம் வாட்டுந ரல்லர்; மனைவயின் பல்லியும் பாங்கொத் திசைத்தன; நல்லெழி லுண்கணும் ஆடுமா லிடனே.” |
எனக்கூறி அழியும் தலைவியை ஆற்று வித்தல் காண்க. |
“தண்கயத் தமன்ற வண்டுபடு துணைமலர்” எனும் மருதனிளநாகனார் அகப்பாட்டில் (அகம்-59) |
“வருந்தினை வாழியர் நீயே; ... .... .... .... .... .... .... ... ... ... ... தாம்பா ராட்டிய காலையு முள்ளார் பிரிந்து சேணுறைநர் சென்ற வாறே, புன்தலை மடப்பிடி உணீஇயர் அங்குழை நெடுநிலை யாஅ மொற்றி நனைகவுள் படிஞிமிறு கடியும் களிறே.” |
என்று எடுத்துக்காட்டி அழியும் தலைவியைத் தோழி ஆற்றுவித்தலும் காண்க. |
இனி, ‘என்றிவை எல்லாம்’ எனப் பொதுபடக் கூறுதலான், தோழி ‘இது பருவமன்று’ என்பது போன்று கூற்றுகள் நிகழ்த்தி ஆற்றுவித்தலையுங் கொள்க. அதற்குச் செய்யுள் வருமாறு. |
“மடவ மன்ற தடவு நிலைக் கொன்றை; கல்பிறங் கத்தஞ் சென்றோர் கூறிய பருவம் வாரா வளவை நெரிதரக் கொம்புசேர் கொடியிண ரூழ்த்த, வம்ப மாரியைக் காரென மதித்தே.” |
(குறு-66)
|
சிவலிங்கனார் |
இச்சூத்திரம் உடன்போக்கின்கண் தோழி கூற்று நிகழுமாறு கூறுகின்றது. நச்சினார்க்கினியர் இக்கருத்தினரே. |
இளம்பூரணரும் பாரதியாரும் உடன்போக்கின் கண்ணும் பொருள்வயிற்பிரிவின் கண்ணும் தோழி கூற்று நிகழுமாறு கூறுகின்றது எனக்கொண்டனர். |
தலைவரு விழும நிலையெடுத்துரைப்பினும் போக்கற்கண்ணும் விடுத்தற்கண்ணும் நீக்கலின் வந்த தம்முறுவிழுமமும் என்பதுவரை உடன்போக்கில் நிகழும் கூற்றுவகையென்றும் |