பக்கம் எண் :

308தொல்காப்பியம் - உரைவளம்

பிறபொருள்வயிற்பிரிவுக்குரிய   கூற்றுவகையெனினும்   கொண்டனர்   அவ்விருவரும்  பொருள்வயிற்பிரிவு
என்பதும் தெளிவாகக் கூறவில்லை.
  

வாய்மையும்  பொய்மையும்  கண்டோற்சுட்டி  என்பதைத்  தனியாகக்  கொண்டு  உதாரணம்  காட்டிய
இளம்பூரணர் தாய் நிலை நோக்கித் தலைப்பெயர்த்துக் கொளற்கு உதாரணம் காட்டவில்லை.
  

பாரதியார்     ‘வாய்மையும்... .... தலைபெயர்த்துக்கொளினும்’  என்பதற்கு “வாய்மையும் பொய்ம்மையும்
புனைந்து   கூறியும்  கண்டோரைச்சுட்டியும்  நற்றாயின்   பருவரலைக்கருதி   மறுத்தர    (-தலைவிமீள)த்
தலைவியை  வரவேற்றுக்கொள்ளுதலினும்” எனப்பொருள்  எழுதினர்.  உதாரணம் காட்டவில்லை.  தலைவி
மீளுதல் என்பது எப்பிரிவிலும் இல்லையாதலின் உரை பொருந்தாது.
  

43.   
  

பொழுதும் ஆறும் உட்குவரத் தோன்றி
வழுவின் ஆகிய குற்றம் காட்டலும்
ஊரது சார்பும் செல்லும் தேயமும்
ஆர்வ நெஞ்சமொடு
1செப்பிய வழியினும்
புணர்ந்தோர் பாங்இன் புணர்ந்த நெஞ்சமொடு
அழிந்துஎதிர் கூறி விடுப்பினும் ஆங்கு அத்
தாய்நிலை கண்டு தடுப்பினும் விருப்பினும்
சேய்நிலைக்கு அகன்றோர் செலவினும் வரவினும்
கண்டோர் மொழிதல் கண்டது என்ப 

(43)
 

ஆ.மொ.இல.
  

The     expressions of those who find the couple in their elopement, occur, when warning
them  about   the   dangers   which  may  happen  because  of time and the way they 
travel, when saying kind words about the nearness of their  home and  long  distance  of
the  country to  which  they  propose to go, when  asking  the  couple to return to their
home-town,  when preventing the step-  


1 நெஞ்சமோடு பாடம்.