பக்கம் எண் :

அகத்திணையியல் சூ.221

கொண்டு  கூட்டு எப்படி  அமையினும்  அவ்வேழும்  அகத்திணை என்பதை வருவித்தே கூறவேண்டும்.
முற்படக் கிளந்த என வந்தது கொண்டு அகத்திணை ஏழ்  என  வாராததை  முடித்து  உரையாளர் பொருள்
எழுதினர் என்னலாம்.
  

‘அகர     முதல  னகர  இறுவாய்  முப்பஃதென்ப’  தொல்-எழு நூன்மரபு) என்றது போலக் கைக்கிளை
முதலாப்  பெருந்திணை  இறுவாய்  முற்படக்  கிளந்த   எழுதிணை  என்றார்  என்க. அதனால் “முற்படக்
கிளந்த எழுதிணை கைக்கிளை முதலாப் பெருந்திணை யிறுவாய் என்ப” எனக் கூட்டல் சிறக்கும்.
  

கைக்கிளை  என்பதில்  கை  என்பது  சிறுமையையுணர்த்தும் இடைச்சொல். எனவே கைக்கிளை என்பது
இடைச்சொற்றொடராம்.  அது  சிறுமையாகிய   உறவு   எனப்   பண்புக்கேற்ப   விவரிக்கப்படும்.  உறவிற்
சிறுமையாவது  ஒருவனும்  ஒருத்தியும்  ஒத்த  அன்பினராய்  உறுதலின்றி  ஒருவன்  மட்டில்  ஒருத்தியின்
கருத்தறியாது  அல்லது  அவள் காமம் சாலாதவள்  என்பதறியாது  அவளுடன்  உறவு  கொள்ளக்  கருதும்
நிலைமையாகும்.   இவன்   அவன்   கைக்குப்    போனான்’   என்றவிடத்துக்  ‘கை’   என்பது   பக்கம்
எனப்பொருள்   படுதல்போலக்   கைக்கிளை   என்பதிலும்  கை  என்பது  பக்கம்  என்னும் பொருள்படும்
எனக் கொண்டு கைக்கிளையாவது ஒருபக்க உறவு எனக்கொள்வது சிறக்கும்.
  

பெரும்பிரிவு     பெருந்தூக்கம்   போலப்   பெருந்திணை   என்பது   பொருந்தாத்திணை   என்னும்
பொருளதாகும்.  நடுவண்  ஐந்திணைத்  தலைவர்  போல  ஒத்த   அன்பினராய்ப்   பொருந்துதல்  இன்றி
வேறுபடுதலின் பெருந்திணையாயிற்று.
  

2.

அவற்றுள்
நடுவண் ஐந்திணை நடுவணது ஒழியப்
1
படுதிரை வையம் பாத்தியப் பண்பே.
(2)
 

ஆ.மொ: இல.
  

Of them  

the world surrounded by sea is divided
and apportioned to ‘ainthinai’ standing
in the middle of the group exepting the
middle (of five)
  


1. ஒழிய - பாடம் நச்.