பக்கம் எண் :

பொழுதும் ஆறும் உட்குவரத் தோன்றி சூ.43309

mother  from  going in  search  of them,  when directing her (step-mother) to  the place
they  are  going,  when  the  couple  take long route to a far-off place and when  they 
return to their home-town.
  

பி.இ.நூ.
  

தொல் சூ 39ல் இலக்கண விளக்கச் சூத்திரத்தில் காண்க.
  

இளம்பூரணர்
  

43. பொழுது மாறும். . . ... ... கண்டது என்ப.
  

இது கண்டோர் கூற்று நிகழும் இடன் உணர்த்துல் நுதலிற்று.
  

(இ-ள்)     பொழுதும் ஆறும் உட்குவரத் தோன்றிவழுவின் ஆகிய  குற்றம் காட்டலும்  ஊரது சார்பும்
செல்லும்  தேயமும்  ஆர்வ  நெஞ்சமொடு  செப்பிய   வழியினும்   என்பது, காலமும்  நெறியும்  அச்சம்
வருமாறு  தோன்றி  வழுவுதலினாகிய   குற்றம்  காட்டலும்  ஊரது   அணிமையும்  செல்லும்  தேயத்தின்
சேய்மையும் ஆர்வ நெஞ்சமொடு செப்பிய பக்கத்தினும் என்றவாறு.
  

“எம்ஊர் அல்லது ஊர்நனித்து இல்லை
வெம்முரண் செல்வன் கதிரும் ஊழ்த்தனன்
சேந்தனை சென்மோ பூந்தார் மார்ப
இளையள் மெல்லியள் மடந்தை
அரிய சேய பெருங்கல் ஆறே.” 
  

(சிற்றட்டகம்)

எனவரும்.1
  

“புணர்ந்தோர்  பாங்கில்  புணர்ந்த  நெஞ்சமொடு  அழிந்து எதிர் கூறி விடுப்பினும் என்பது, புணர்ந்து
செல்கின்றோர்  


1 செங்கதிர்ச்  செல்வன்  கதிரும   ஊழ்த்தனன் என்பது  பொழுதின்  குற்றம்  கூறியது.  அரிய  சேய
பெருங்கல் ஆறு  என்பது  ஆற்றின்  (வழி)  குற்றம் கூறியது எம்மூர் அல்லது ஊர் நனித்து இல்லை
என்பது ஊர் அணிமையும் இனிச்செல்லும் ஊர் சேய்மையும் குறித்தவாறு.