பக்கத்து விரும்பின நெஞ்சத்தோடு மனன் அழிந்து2 எதிர் மொழி3 கூறி விடுத்தற்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு. |
“அழுந்துபட வீழ்ந்த பெருந்தண் குன்றத்து ஒலிவல் ஈந்தின் உலவை யங்காட்டு ஆறுசெல் மாக்கள் சென்னி எறிந்த செம்மறுத் தலைய நெய்த்தோர் வாய வல்லியம் பெருந்தலைக் குருளை மாலை மரல்நோக்கும் இண்டிவர் ஈங்கைய சுரனே வையெயிற்று ஐயள் மடந்தை முன்னுற்று எல்லிடை நீங்கும் இளையோன் உள்ளங் காலொடு பட்டமாரி வால்வரை மிளிர்க்கும் உருமினுங் கொடிதே.” |
(நற்-2) |
எனவரும். |
ஆங்கு அத்தாய்நிலை கண்டு தடுப்பினும் விடுப்பினும் என்பது, ஆண்டுப் பின் சென்று அச்செவிலித்தாயது நிலைமையைக்கண்டு போகாமல் தடுத்தற்கண்ணும் போக விடுத்தற் கண்ணும் என்றவாறு. |
“அறம்புரி அருமறை நவின்ற நாவின் நிறம்புரி கொள்கை அந்தணிர் தொழுவலென்று ஒண்டொடி வினவும் பேதையம் பெண்டே கண்டனெம் அம்ம சுரத்திடை அவளே இன்றுணை இனிதுபா ராட்டக் குன்றுயர் பிறங்கல் மலையிறந் தோளே” |
(ஐங்குறு-387)
|
எனவரும், இது செவிலி வினாஅயவழிக் கூறியது. |
“பெயர்ந்து போகுதி பெருமூ தாட்டி சிலம்புகெழு சீறடி சிவப்ப இலங்கு வேற் காளையோ டிறந்தனள் சுரனே.” |
இது தடுத்தற்கண்4 வந்தது. |
2 மனன் அழுங்கி - மனம் வருந்தி. |
3 எதிர் மொழி கூறி-போவார் எதிரே சில சொற்கூறி. |
4 இனித்தேடி அப்பாற்செல்ல வேண்டுவதில்லை எனத் தடுத்தற்கண் வந்தது. இறந்தனள் தான் என்பதால். |