“நெருப்பவிர் கனவி உருப்புச்சினந் தணியக் கருங்கால் யாத்து வரிநிழல் இரீஇச் சிறுவரை யிறப்பிற் காணகுவை செறிதொடிப் பொன்னேர் மேனி மடந்தையொடு வென்வேல் விடலை முன்னிய சுரனே.” |
(ஐங்குறு-388) |
இது விடுத்தற்கண்5 வந்தது. |
சேய்நிலைக்கு அகன்றோர் செலவினும் வரவினும் என்பது சேய்மைக்கண் அகன்றோர் செல்லுதற்கண்ணும் வரவின் கண்ணும் என்றவாறு. |
“வில்லோன் காலன கழலே தொடியோள் மெல்லடி மேலவுஞ் சிலம்பே நல்லோர் யார்கொல் அளியர் தாமே ஆரியர் கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி வாகை வெண்நெற் றொலிக்கும் வேய்பயில் அழுவம் முன்னி யோரே.” |
(குறுந்-7) |
எனவரும்.6 |
‘கண்டோர் மொழிதல் கண்டது என்ப’ என்பது, இவ்விவ்விடங்களில் கண்டோர் சொல்லுதல் வழக்கிற் காணப்பட்ட தென்ப என்றவாறு. |
நச்சினார்க்கினியர் |
43. பொழுதும்... ... ... ... ... என்ப |
இது, கொண்டு தலைக்கழிந்துழி இடைச் சுரத்துக்கண்டோர் கூறுவன கூறுகின்றது. |
(இ-ள்) பொழுதும் ஆறும் உட்குவரத் தோன்றி வழுவின் ஆகியகுற்றம் காட்டலும் - உடன்போயவழி மாலைக் காலமுஞ்சேறற்கரிய வழியும் அஞ்சுவரக் கூறி அவற்றுது தீங்கு காரண |
5. தேடிச்செல்க என விடுத்தல். |
6 பிரிந்த காதலர் செலவுகண்ட போதும் அகன்றவர் மீண்டு வருதல் கண்டபோதும் கூறுதற்கு இச்செய்யுள் ஒன்றே அமையும். |