பக்கம் எண் :

பொழுதும் ஆறும் உட்குவரத் தோன்றி சூ.43313

“இதுநும் ஊரே யாவருங் கேளீர்
பொதுவறு சிறப்பின் வதுவையுங் காண்டு
மீன்றோ ரெய்தாச் செய்தவம்
யாம்பெற் றனமான் மீண்டனை சென்மே.”
   

இஃது  அழிந்தெதிர்  கூறி  விடுத்தது1.  இது  கொடுப்போரின்றிக்  கரண  முண்மை கூறிற்று  மீட்டுழி
இன்னுழிச் சென்று இன்னது செய்ப ஒன்றல் புலனெறிவழக்கன்று.
  

“பெயர்ந்து போகுதி பெருமூ தாட்டி
சிலம்புகெழு சீறடி சிவப்ப
விலங்குவேற் காளையோ டிறந்தனள் சுரனே.”
   

“சீர்கெழு வெண்மூத்த மணிபவர்க் கல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்கவைதா மென்செய்யுந்
தேருங்கா னும்மக ணுமக்குமாங் கனையளே.”
 

“கடன்மேய சங்கங் கழியடைந்த பெண்ணை
மடன்மேய வாழ்குர லன்றில்-கெடலருஞ்சீர்
வாமா னெடுங்கோதை வான்றீண்டு கொல்லிமேற்
றேமாவின் மேய கனி.”
   

இவை செவிலியைத் தடுத்தன.
 

“சிலம்புஞ் சிறு நுதலுஞ் சில்குழலும் பல்வளையு  

மொருபாற் றோன்ற

அலங்கலந் திண்டோளும் ஆடெடுத்து ஒண்குழையு

மொருபாற் றோன்ற  

விலங்க லருஞ்சுரத்து வேறுருவின் ஒருடம்பாய்

வருவார்க் கண்டே

அலங்கல் அவிர்சடையெம் அண்ணல் விளையாட்டென்

றகன்றேம் பாவம்.”
 

இது தெய்வமென யாங்கள் போந்தேம், நுமக்கெய்தச் சேறலாமென்று விடுத்தது.  


1 தம்  ஊர்க்கண்   விடுத்தது.   வதுவையும்  காண்டும்  திருமணம்  செய்து  வைப்பேம்  -  எனவே
தலைமக்கள் கொடுப்பதின்றி மணம்உண்டு. என்பதற்கு இச்செய்யுள் சான்றாம். மீட்டுழி-மீண்டவிடத்து.