பக்கம் எண் :

பொழுதும் ஆறும் உட்குவரத் தோன்றி சூ.43317

அச்சந்தரத்தக்கவாக,  அவை  அஞ்சாது  சென்று  இடையூறு  மேதங்  கருதாதேகும் பிழையை அவர்கட்கு
எடுத்துக்காட்டுதலும்;  ஊரது   சார்வும்-உடன்  போவார்க்கு   வழித்தங்க   அண்மையில்  ஊருண்மையை;
ஆர்வ  நெஞ்சமொடு   செப்பிய   வழியினும்-அன்பு  நிறைந்த  உள்ளத்தொடு தலைமக்கட்கு அவர் நலம்
பேணிப்  பரிந்து  கூறுமிடத்தும்;  புணர்ந்தோர்  பாங்கிற்  புணர்ந்த   நெஞ்சமொடு   அழிந்தெதிர்  கூறி
விடுப்பினும்...காதலால்  கூடின  தலைமக்கள் பால்  அன்புற்ற  உள்ளத்தோடு அவர் நிலைமைக்கு  வருந்தி
எதிரெடுத்துரைத்து  அவரை   விடுவிக்குமிடத்தும்  ஆங்கத்  தாய்நிலைகண்டு  தடுப்பினும்-தலைமக்களைத்
தாங்கண்ட  சுரத்தினிடையே   தேடிவரும்   செவிலித்தாய் நிலைமை கண்டு  அவளைமேற்செல்லின் தலை
மக்களைக்  காண்பை  எனக்கூறி   அவளைப்போக   விடுக்குமிடத்தும்;  சேய்நிலைக்ககன்றோர் செலவினும்
வரவினும்  தொலை  தலைமக்களின்  உடன்   போக்கிலும்,  அவர்   மறுதரவிலும்; கண்டோர்  மொழிதல்
கண்டதென்ப-உடன்   போம்    தலை    மக்களைக்   கண்டவர்கள்   கூற்று  நிகழ்த்தல்,  வழக்கின்கண்
காணப்பட்ட தென்பர் அகப்பொருள் நூலார்.
  

பொழுதும் ஆறும் உட்குவரத் தோன்றி வழுவினாகிய குற்றங் காட்டற்குச் செய்யுள்:
   

“எல்லு மெல்லின்று, பாடுங் கேளாய்,
செல்லா தீமோ சிறுபிடி துணையே
வேற்றுமுனை வெம்மையிற் சாத்துவந் திறுத்தென.

வளையணி நெடுவே லேந்தி
மிளைவந்து பெயருந் தண்ணுமைக் குரலே”
  

(குறுந்-390)
 

கண்டோர் ஊரணிமை கூறும் கிளவி வருமாறு:
  

“நல்லோண் மெல்லடி நடையு மாற்றாள்,
பல்கதிர்ச் செல்வன் கதிரும் ஊழ்த்தனன்:

அணித்தாற் றோன்றுவது எம்மூர்,

மணித்தார் மார்ப! சேர்ந்தனை சென்மோ”.
  

(பொருள்-புறத்-சூ-40 உரைமேற்கோள்)
 

ஆர்வ நெஞ்சமொடு கண்டோர் கூறியதற்குக் கூற்று: