பக்கம் எண் :

318தொல்காப்பியம் - உரைவளம்

“வில்லோன் காலன கழலே, தொடியோண்
மெல்லடி மேலவுஞ் சிலம்பே, நல்லோர்
யார்கொல் அளியர் தாமே, ஆரியர்
கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி
வாகை வெண்ணெற் றொலிக்கும்
வேபயில் அழுவம் முன்னி யோரே.”
  

(குறுந்-7)
 

“பைங்காய் நெல்லி பலவுடன் மிசைந்து
செங்கால் மராஅத்த வரிநிழல் இருந்தோர்
யார்கொல்? அளியர் தாமே, வார்சிறைக்
குறுங்கால் மகன்றில் அன்ன
உடன்புணர் கொள்கைக் காத லோரே”.

 

எனும் ஐங்குறு நூறு 381 மது,  
 

அழிந்தெதிர் கூறிவிடுத்தற்குச் செய்யுள்:
  

“இதுநும் மூரே, யாவருங் கேளிர்;
பொதுவறு சிறப்பின் வதுவையுங் காண்டும்;

ஈன்றோர் எய்தாச் செய்தவம்
யாம் பெற்றனமால் மீண்டனை சென்மோ.”
  

(பொருள்-40சூ மேற்கோள்)
 

தாய்நிலை கண்டு கொண்டார் தடுத்தற்குச் செய்யுள்:
   

“பெயர்ந்து போகுதி பெருமூ தாட்டி!
சிலம்புகெழு சீறடி சிவப்ப
இலங்குவேற் காளையொடு இறந்தனன் சுரனே”.
   

தாய்நிலை கண்டு விடுத்தற்கு மேற்கோள்:
  

“நெருப்பவிர் கனலி உறுப்புச்சினந் தணியக்
கருங்கால் யாத்து வரிநிழ லிரீஇ
சிறுவரை இறப்பிற் காண்குவை செறிதொடிப்
பொன்னேர் மேனி மடந்தையொடு
வென்வேல் விடலை முன்னிய சுரனே”.

(ஐங்குறு-388)
 

சேய் நிலைக்கன்றோர் செலவிற் கண்டோர் கூறும் கூற்று:
  

“செய்வினைப் பொலிந்த செறிகழல் நோன்தாள்
மையணற் காளையொடு பைய வியலிப்