நம்பி 6. இல. வி. பொருள். 379 |
குறிஞ்சி பாலை முல்லை மருதம் நெய்தல் ஐந்திணைக்கு எய்திய பெயரே |
தொன். 174, முத்து அக.8. |
முல்லை குறிஞ்சி பாலை மருதம் நெய்தல் ஐந்திணைக்கு எய்திய பெயரே |
2. அவற்றுள், ..... ... பண்பே |
இது மேற்சொல்லப்பட்ட எழுதிணையுள், நிலம்பெறுவன வரையறுத்து உணர்த்துதல் நுதலிற்று. |
(இ-ள்) அவற்றுள் - மேற்சொல்லப்பட்ட எழுதிணையுள், நடுவணது ஒழிய - நடு எனப்பட்ட பாலை ஒழிய, நடுவண் ஐந்திணை - (கைக்கிளை பெருந்திணைக்கு) நடுவணதாகி நின்ற ஐந்திணை, படுதிரை வையம் பாத்திய பண்பு - ஒலிக்கின்ற திரை கடல் சூழ்ந்த உலகம் பகுக்கப்பட்ட இயல்பு. |
இதனாற் சொல்லியது எழுவகைத்திணையினும் நிலம்பெறுவன நான்கு என்றவாறாயிற்று. நடுவணது பாலை என்று எற்றாற் பெறுதும் எனின், வருகின்ற சூத்திரங்களுள், |
‘முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல்’. |
(அகத் - 5) |
என நிலம் பகுத்து ஓதினமையின்1, நடுவணது பாலை எனக் கொள்ளப்படும். நடுவு நிலைத் திணையெனினும் பாலை எனினும் ஒக்கும், பாலை என்னுங் குறியீடு எற்றாற்பெறுதும் எனின், |
1. நிலம் பகுத்து ஓதிப் பாலைக்கு நிலம் பகுத்து ஓதாது விட்டமையால் குறிஞ்சி முதலியவற்றின் நடுவிருப்பது பாலை எனக் கொள்ளப்பட்டது. |