பக்கம் எண் :

ஒன்றாத் தமரினும் பருவத்தும் சுரத்தும் சூ.44319

பாவை யன்னஎன் ஆய்தொடி மடந்தை
சென்றனள் என்றிர் ஐய!

ஒன்றின வோஅவள் அஞ்சிலம் படியே?”

(ஐங்-389)
 

இதில்  செவிலி   கொண்டு கூறும்   கண்டோர்   கூற்றைக் காண்க. மறுவரவின்கட் கண்டோர் கூறுதற்குச்
செய்யுள்:
  

“இவன் இவள் ஐம்பால் பற்றவுனை மிவளிவன்
புன்றலை யோரி வாங்குள் பரியவும்
காதற் செவிலியர் தவிர்ப்பவுந் தவிராது
எதில் சிறுசெறா வுறுப மன்னோ;

நல்லைமன் றம்ம பரலே! மெல்லியல்
துணைமலர்ப் பிணையலன்ன இவர்
மணமகிவ் இயற்கை காட்டி யோயே”.
  

(குறுந்.299)
 

(39)
 

44.

ஒன்றாத் தமரினும் பருவத்தும் சுரத்தும்
ஒன்றிய மொழியொடு வலிப்பினும் விடுப்பினும்
இடைச்சுர மருங்கின் அவள்தமர் எய்திக்
கடைக்கொண்டு பெயர்தலின் கலங்கு அஞர் எய்திக்
கற்பொடு புணர்ந்த கௌவை யுளப்பட
அப்பாற்பட்ட ஒருதிறத் தானும்
நாளது இன்மையும் இளமையது அருமையும்
தாளாண் பக்கமும் தகுதியது அமைதியும்
இன்மையது இளிவும் உடைமையது உயர்ச்சியும்
அன்பினது அகலமும் அகற்சியது அருமையும்
ஒன்றாப் பொருள்வயின் ஊக்கிய பாலினும்
வாயினும் கையினும் வகுத்த பக்கமொடு
ஊதியம் கருதிய ஓருதிறத்தானும்
புகழும் மானமும் எடுத்துவற் புறுத்தலும்
தூது இடையிட்ட வகையி னானும்
ஆகித் தோன்றும் பாங்கோர் பாங்கினும்
மூன்றன் பகுதியும் மண்டிலத்து அருமையும்
தோன்றல் சான்ற மாற்றோர் மேன்மையும்
பாசறைப் புலம்பலும் முடிந்த காலத்துப்
பாகனொடு விரும்பிய வினைத்திற வகையினும்