இளம்பூரணர் |
44. ஒன்றாத் தமரினும்... ... ... ... கிழவோன்மேன |
இது பிரிவின் கண் தலைமகற்குக் கூற்று நிகழும் இடன் உணர்த்துதல் நுதலிற்று. |
(இ-ள்) ஒன்றாத் தமரினும் பருவத்தும் சுரத்தும் ஒன்றிய மொழியொடு வலிப்பினும் விடுப்பினும் என்பது, வரைவு உடன் படாத தமர் கண்ணும் பருவத்தின் கண்ணும் சுரத்தின் கண்ணும் பொருந்திய சொல்லொடு தலைமகளை உடன்கொண்டு போகத் துணியினும் விடுத்துப்போகினும் கிழவோற்குக் கூற்று நிகழும் என்றவாறு. |
உரைத்திற நாட்டம் உளவாம் கிழவோற்கு1 என்பதை ஏனைய பகுதிக்கும் ஒட்டுக. |
வலித்தற்குச் செய்யுள்: |
“ஆறுசெல் வருத்தத்துச் சீறடி சிவப்பவுஞ் சினைநீங்கு தளிரின் வண்ணம் வாடவுந் தான்வரல் துணிந்த இவளினும் இவளுடன் வேய்பயில் அழுவம் உவக்கும் பேதை நெஞ்சம் பெருந்தகவு உடைத்தே.” |
“வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சில் குளவி மொய்த்த அழுகற் சின்னீர் வளையுடைக் கையள் எம்மோ டுணீஇயர் வருகதில் அம்ம தானே அளியளோ அளியள் என் நெஞ்சமர்ந் தோளே.” |
(குறுந்-56) |
எனவும் வரும். |
அவ்வழி இடைச்சுரத்திற் கூறியதற்குச் செய்யுள் |
“அழிவில முயலும் ஆர்வ மாக்கள் வழிபடு தெய்வம் கண்கண் டாஅங்கு அலமரல் வருத்தந் தீர யாழநின் நலமென் பணைத்தோ ளெய்தின மாகலிற் |
1 கிழவோன்மேன என்பதை இவ்வாறு எழுதினார். |