பொரிப்பூம் புன்கி னெழிற்றகை யொண்முறி சுணங்கணி வனமுலை யணங்குகொளத் திமிரி நிழல்காண் தோறும் நெடிய வைகி மணல்காண் தோறும் நெடிய வைகி வருந்தா தேகுமதி வாலெயிற் றோயே மாநனை கொழுதி மகிழ்குயில் ஆலும் நறுந்தண் பொழில கானங் குறும் பல் ஊரயாஞ் செல்லு மாறே.” |
(நற்-9) |
எனவரும். |
விடுத்தற்குச் செய்யுள்: |
“இரும்புலிக் கிடந்த கருங்கட் நெந் நாகு நாட்டயிர் கடைகுரல் கேட்டொறும் வெரூஉம் ஆநிலைப் புள்ளி அல்க நம்மொடு மானுண் கண்ணியும் வருமெளின் வாரார் ஆயரோ பெருங்க லாறே.”2 |
எனவரும். இஃது உடன் கொண்டு பெயர்தல் வேண்டுமென்ற தோழிக்குக் காட்டது கடுமை கூறி விடுத்தது. |
“கிளிபுரை கிளவியாய் எம்மொடு நீவரின் தளிபொழி தளிரன்ன எழில்மேனி கவின்வாட முளியரில் பொத்திய முழங்கழல் இடைபோழ்ந்த வலியுறின் அவ்வெழில் வாடுவை யல்லையோ.” |
(கலி-பாலை-12) |
என்பது தலைவிக்குக் காட்டது கடுமை கூறி விடுத்தது. |
இடைச்சுரம் மருங்கின் அவன் தமர் எய்திக் கடைக் கொண்டு பெயர்தலில் கலங்கு அஞர் எய்திக் கற்பொடுபுணர்ந்த கௌவை உளப்பட அப்பால் பட்ட ஒரு திறத்தானும் என்பது |
2 இச்செய்யுள் சிதைந்துளது போலும் விடுத்தற்கு ஏற்ற கருத்து இல்லாமையோடு ‘நம்மொடு வரும் எனின் வாரார் ஆயரோ’ என்பன. தொடர்புபடவில்லை. |