தலைமகள் செல்கின்ற இடைச் சுரத்திடைத் தலைமகள் தமர் எய்தி மீட்டுக்கொண்டு பெயர்தல் மரபாதலின் அங்ஙனம் பெயர்வர் எனக் கலங்கி வருத்தமுற்றுக் கற்பொடு புணர்ந்த அலர்3 உளப்பட அப்பகுதிப்பட்ட உடன் போக்கின் கண்ணும் அவற்குக் கூற்று நிகழும் என்றவாறு: |
அவ்வழி, வருவரெனக் கூறலும் வந்தவழிக் கூறலும் உளவாம். |
“வினையமை பாவையின் இயலி நுந்தை மனைவரை இறந்து வந்தனை யாயின் தலைநாட் கெதிரிய தண்பெயல் எழிலி அணிமிகு கானத் தகன்புறம் பரந்த கடுஞ்செம் மூதாய் கண்டுங் கொண்டும் நீ விளை யாடுக சிறிதே யானே மழகளிறு உரிஞ்சிய பராஅரை வேங்கை மணலிடு மருங்கின் இரும்புறம் பொருந்தி அமர்வரின் அஞ்சேன் பெயர்க்குவன் நுமர்வரின் மறைகுவென் மாஅ யோளே.” |
(நற்-362) |
இது வருவர் என ஐயுற்றுக் கூறியது4. ‘கற்பொடு புணர்ந்த கௌவை’க்குச் செய்யுள் வந்தவழிக் கண்டு கொள்க. |
நாளது சின்மையும் இளமையது அருமையும் தாளாண் பக்கமும் தகுதியது அமைதியும் இன்மையது இளிவும் உடைமையது உயர்ச்சியும் அன்பினது அகலமும் அகற்சியது அருமையும் ஒன்றாப் பொருள்வயின் ஊக்கிய பாலினும் என்பது, நாளது சின்மை முதலாகச் சொல்லப்பட்ட எட்டனையும் பொருந்தாத பொருட்கண் ஊக்கிய பக்கத்தினும் அவற்குக் கூற்று நிகழும் என்றவாறு |
3 கற்பொடு புணர்ந்த அலர்-தலைவி தலைவனுடன் போதலே கற்புக்குரிய ஒழுக்கம், அப்போக்கு பற்றிய அலர் கற்பொடு புணர்ந்த அலர் எனப்படும் |
4 அவர்வரின், நுமர்வரின் என வந்தமையால் ஐயுற்றதாகக் கொள்க. |