பக்கம் எண் :

328தொல்காப்பியம் - உரைவளம்

நாம்பிரி அறியா நலனொடு சிறந்த
நற்றோள் நெகிழ வருந்தினள் கொல்லோ
மென்சிறை வண்டின் தண்கமழ் பூந்துணர்
தாதின் துவலை தளிர்வார்ந் தன்ன
அங்கலுழ் மாமைக் கிளைஇய
நுண்பல் தித்தி மாஅ யோளே.”

(அகம்-41)
 

என்பது    பகையிற் பிரியும் தலைமகன் கூற்று* பிறவும். அன்ன இவ்வாறு வருவன14 குறித்த பருவம்
பிழைத்துளி என்று கொள்க,

முடிந்த காலத்துப் பாகனொடு விரும்பிய வினைத்திற வகையினும் என்பது, முடிந்த காலத்துப் பாகனொடு
விரும்பப்பட்ட வினைத்திறத்தினது வகையின் கண்ணும் அவற்குக் கூற்று நிகழும் என்றவாறு.
    

அது  பாசறைக்கட்  கூறலும்,  மீண்டு  இடைச்சுரத்துக்  கூறலும் என இருவகைப்படும். இன்னும், ‘வகை’
என்றதனான் நெஞ்சிற்குக் கூறியனவுங் கொள்க.
  

“வந்துவினை முடித்தனன் வேந்தனும் பகைவரும்
தந்திறை கொடுத்துத் தமரா யினரே
முரண்செறிந் திருந்த தானை இரண்டும்
ஒன்றென் அறைந்தன பணையே நின்தேர்
முன்னியங்கு ஊர்தி பின்னிலை யீயாது
ஊர்க பாக ஒருவினை கழிய
நன்னன் ஏற்றை நறும்பூங் அத்தி
துன்னருங் கடுந்திறல் கங்கன் கட்டி
பொன்னணி வல்விற் புன்றுறை யென்றாங்
  


* இச்செய்யுளில் பகைவயிற் பிரிவுக்கோ பிற பிரிவுக்கோ யாதோர் குறிப்பும் இல்லை.
  

14 தலைவன் பாசறைக்கண் தனிமையுற்றுக் கூறுவதாக வருவன.