‘வாகை தானே பாலையது புறனே’. |
(புறத்-15) |
என்பதனாற் பெறுதும்2 இச்சூத்திரத்துள் ஒழிய என்னும் வினையெச்சம் எவ்வாறு முடிந்தது எனின், அது பாத்திய என்னும் பெயரெச்சத்தோடு முடிந்தது. அப்பெயரெச்சம் பண்பு என்னும் பெயர்கொண்டு ஐந்திணை என்னும் எழுவாய்க்குப் பயனிலையாகி நின்றது என உரைப்ப. |
இவ்வாறு உரைப்பவே, ஐந்திணை பண்பு என வரூஉங்காலத்துப் பயன்பட3 நில்லாமையின் அஃது உரையன்று என்பார் உரைக்குமாறு:- ஒழிய என்பதனை எச்சப்படுத்தாது முற்றுப்படக்கூறி. |
“படுதிரை வையம் பாத்திய பண்பு நடுவண தொழிய” எனப் பொருள் உரைப்ப. அஃதேல் வினையெச்ச வாய்பாட்டால் வரும் முற்றுளவோ எனின், |
“வினையெஞ்சு கிளவியும் வேறுபல் குறிய.”4 (எச்ச-59) என்று முற்று வாய்பாட்டால் வினையெச்சம் வருதலின் வினையெச்ச வாய்பாட்டால் முற்று வரும் என்பதூஉம் அச்சூத்திரத்தின் அமைத்துக் கொள்ளப்படும் என்ப. இவ்வுரை இரண்டினும் ஏற்பது அறிந்து கொள்க. |
*‘நடுவண் ஐந்திணை’ என்பன யாவை எனின், முல்லை, பாலை, மருதம், நெய்தல் என்பனவாம். எற்றுக்கு? இந்நூல் |
2. வாகைதானே நடுவணது புறனே என்பதற்குப் பதிலாகப் பாலையது புறனே என்பதனால் நடுவணது பாலை என்பது பெறப்படும். 3. பயன்பட - எழுவாய் பயனிலைத் தொடர் பொருள்பட, (பண்பு என்பதைப் பண்பு ஆம் எனக் கொள்ளின் நன்று). 4. இச்சூத்திரம் வினைமுற்று எச்சமாகும் என்பதற்குக் கூறப்பட்டது. *”நடுவண்............ஆணாம் என்க” - விளக்கம். |