பக்கம் எண் :

330தொல்காப்பியம் - உரைவளம்

“கொல்வினைப் பொலிந்த கூர்ங்குறும் புழுகின்
வில்லோர் தூணி வீங்கப் பெய்த 
அப்புநுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பைக்
செப்படர் அன்ன செங்குழை அகந்தோ
றிழுதின் அன்ன தீம்புழல் துய்வாய்
உழுதுகாண் துளைய வாகி ஆர்கழல்பு
ஆலி வானிற் காலொடு பாறித்
துப்பின் அன்ன செங்கோட் டியலின்
நெய்த்தோர் மீமிசை நிணத்திற் பரிக்கும்
அத்த நண்ணிய அங்குடிச் சீறூர்க்
கொடுநுண் ணோதி மகளிர் ஓக்கிய
தொடிமாண் உலக்கைத் தூண்டுவரற் பாணி
நெடுமால் வரைய குடிஞையோ டிரட்டும்
குன்றுபின் ஒழியப் போகி உரந்துரந்து
ஞாயிறு படினும் ஊர்சேர்த் தெனாது
துனைபரி துரக்கும் துஞ்சாச் செலவின்
எம்மினும் விரைந்துவல் லெய்திப் பன்மாண்
ஓங்கிய நல்லில் ஒருசிறை நிலைஇப்
பாங்கர்ப் பல்லி படுதொறும் பரவிக்
கன்றுபுகு மாலை நின்றோள் எய்திக்
கைகவியாச் சென்று கண்புதையாக் குறுகிப்
பிடிக்கை யன்ன பின்னகந் தீண்டித்
தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ
நாணொடு மிடைந்த கற்பின் வாள்நுதல்
அந்தீங் கிளவிக் குறுமகள்
 
மென்றோள் பெறநசைஇச் சென்றஎன் நெஞ்சே.”
  

(அகம்-9)
 

இஃது இடைச் சுரத்துச் சொல்லியது.15
  

காவல்  பாங்கின்  ஆங்கு  ஓர்  பக்கம் என்பது காவற் பக்கத்தின் கண் ஒரு பிரிவினும் கூற்று நிகழும்
என்றவாறு.
  

‘ஆங்கு’  என்பது  இடங்குறித்து  நின்றது;  “நின்னாங்கு  வரூஉ  மென் நெஞ்சினை” (கலி-பாலை, 22)
என்றவாறு  


15 நெஞ்சுக்குச் சொல்லியது.