பக்கம் எண் :

ஒன்றாத் தமரினும் பருவத்தும் சுரத்தும் சூ.44331

போலக்     கொள்க. 16 இது    வாரியுள்17  யானை காணவும். நாடு காணவும்,   புனலாடவும், கடவுளரை
வழிபடவும்  பிரியும்   பிரிவு18 ஒரு பக்கம்  நாட்டெல்லையிலிருந்து பகைவரைக் காக்க வேண்டிப் பிரிவது
பகைவயிற் பிரிவின் அடங்குதலின், அஃததன் உண்மைக்கண் பிரியும் பிரிவு என்று ஓதப்பட்டது.
  

பரத்தையின்   அகற்சியின்  என்பது, பரத்தையரிற் பிரியும் பிரிவின் கண்ணும் என்றவாறு. உம்மை எஞ்சி
நின்றது.19
  

பிரிந்தோள்   குறுகி   இரத்தலும்20  தெளித்தலும்21  என  இரு   வகையோடு  என்பது,  பிரியப்பட்ட
தலைமகளைக் குறுகி, இரத்தலும் தெளித்தலும் ஆகிய இரண்டு வகையோடே கூட என்றவாறு.
  

காவற்     பாங்கின் ஆங்கோர் பக்கத்தினும்  பரத்தையின் அகற்சியினும் பிரியப் பட்டார் எனக்கூட்டுக.
அஃதேல்   பரத்தையின்    அகற்சி    ஊடலாகாதோ  வெனின்,  ஊடலின்   மிக்க  நிலையே  ஈண்டுக்
கூறுகின்றதெனக் கொள்க.
  

கடவுள் மாட்டுப் பிரிந்துவந்த தலைமகனைத் தலைமகள் புணர்ச்சி மறுத்தற்குச் செய்யுள்.
  

மருதக்கலியுள் கடவுட்22 பாட்டினுள்,
 

“வண்டூது சாந்தம் வடுக்கொள நீவிய
தண்டாத்தீஞ் சாயல் பரத்தை வியன்மார்ப
பண்டின்னை யல்லைமண் ஈங்கெல்லி வந்நீயக்
கண்ட தெவன்மற் றுரை:

நன்றும்.
  


16 நின்னிடத்துவரும் நெஞ்சு எனப்பொருள் கொள்ளுதல் போல
  

17 வாரி - யானையைப் பிடிக்கத்தோண்டப்படும் குழி
  

18 “இது வாரியுள்... ... ... பிரியும் பிரிவு” இத்தொடர் இங்குப் பொருந்த வில்லை.
  

19 அகற்சியினும் என்றது அகற்சியின் என உம்மை எஞ்சியது.
  

20 வாயில் மூலம் இரத்தல்.
  

21 தன் தவறின்மை கூறித் தெளிவித்தல்
  

22 கடவுள்-முனிவர்.