பக்கம் எண் :

அகத்திணையியல் சூ.225

நடுவுகின்ற     ஐந்தொழுக்கத்தினை,   படுதிரை  வையம்  பாத்திய  பண்பே -  ஒலிக்குந் திரை உலகிற்கு
ஆசிரியன் பகுத்துக் கொடுத்த இலக்கணத்தை, நடுவணது  ஒழிய -  நடுவணதாகிய  பாலையை  அவ்வுலகம்
பெறாதே நிற்கும் படியாகச் செய்தார் என்றவாறு.
  

எனவே, யானும் அவ்வாறே நூல் செய்வ லென்றார்.
  

உலகத்தைப்     படைக்கின்ற  காலத்துக் காடும் மலையும் நாடுங் கடற்கரையுமாகப் படைத்த நால்வகை
நிலத்திற்கு  ஆசிரியன்  தான்  படைத்த   ஐவகை   ஒழுக்கத்திற்   பாலையொழிந்தனவற்றைப்  பகுத்துக்
கொடுத்தான். அப்பாலை ஏனைய போல ஒருபாற் படாது2  நால்வகை  நிலத்திற்கும்  உரியவாகப் புலனெறி
வழக்கஞ்  செய்து வருதல் பற்றி.  பாலைக்கு  நடுவணதென்னும்  பெயர்  ஆட்சியுங் குணனுங் காரணமாகப்
பெற்ற  பெயர்.  ‘நடுவுநிலைத்திணையே  நண்பகல்  வேனில்’  (9)  என   ஆள்ப1  புணர்தல்,  இருத்தல்,
இரங்கல், ஊடல் என்பவற்றிற்கு இடையே பிரிவு நிகழ்தலானும், நால்வகையுலகத்திற்கிடையிடையே,
  

“முல்லையுங் குறிஞ்சியு முறைமையிற் றிரிந்து
நல்லியல் பழிந்து. நடுங்குதுய ருறுத்துப்
பாலையென்பதோர் படிவங் கொள்ளும்”

(சிலப்-காடு 64-66)
  

என     முதற்பொருள்   பற்றிப்  பாலை   நிகழ்தலானும்,   நடுவணதாகிய   நண்பகற்  காலந்  தனக்குக்
காலமாகலானும்  புணர்தற்கும்  இருத்தற்கும்   இடையே  பிரிவு3  வைத்தலானும்,  உலகியற்  பொருளாகிய
அறம்பொருளின்பங்களுள்    நடுவணதாய    பொருட்குத்   தான்    காரணமாகலானும்,   நடுவணதெனக்
குணங்காரணமாயிற்று.
  


1. பாலையை நடுவுநிலைத்திணை என்ற பெயரால் ஆசிரியர் ஆண்டமை காண்க.

2. பாலை  மற்றை   உரிப்பொருள்கள்  குறிஞ்சி   நிலம்  முல்லை  நிலம்  என்பனவற்றுள்  தனித்தனி
ஓரிடத்தும் பொருந்துதல் போலத் தனக்கென ஒரு நிலம் பொருந்தாது.

3. பாலைக்கு உரிப்பொருள் பிரிவு.