பக்கம் எண் :

ஒன்றாத் தமரினும் பருவத்தும் சுரத்தும் சூ.44349

சுட்டும்    பகுதியுமாக  அமைந்துள்ளது   பிற்றைய பிரிவுப்பகுதியில் ஆறுவகைப்  பிரிவும்  கூறப்படுகிறது
நாளது  சின்மையும்  என்பது  முதல்,  பொருள்வயின்  ஊக்கிய  பாலினும்  என்பதீறாகப்  பொருட்பிரிவும்
(வாயினும்   கையினும்   என்பது   முதல்   எடுத்து  வற்புறுத்தலும்   என்றதுவரை  ஓதற்   பிரிவும்  (2)
தூதிடையிட்ட   வகையினும்  என்பதால்   தூதிற்   பிரிவும்  (3)   மண்டிலத்  தருமை முதல் வினைத்திற
வகையினும்  என்றது  வரை   பகைவயிற்   பிரிவு   வகையும்  (4)  காவற்பாங்கின்  ஆங்கோர் பக்கமும்
என்பதால்  நாடு  காவற்பிரிவும் (5) பரத்தையின கற்சி என்பதால்  பரத்தையிற்  பிரிவும் (6)  ஆகப் பிரிவு
வகை  ஆறும்  முறையே  வகைப்படுத்திக்  கூறப்பட்டன.  பாசறைப்புலம்பல்,  பாகனொடு கூறல்  முதலிய
பகைவயிற்  பிரிவின்பாற்  பட்டடங்கும்  ஆகித்  தோன்றும்   பாங்கோர் பாங்கினும்,  மூன்றன்  பகுதியும்
என்பது  அதற்கு முன்  வகைப்படுத்திக் கூறப்பட்ட “பொருள், ஓதல், தூது  என்ற  மூன்றன்  பகுதிகளிலும்
உரிய  இடத்துத்  தலைவன்   கூறும்” - எனத்தொகுத்து  உணர்த்தும்  தொடராயமையும்; ‘மூன்றன் பகுதி’
என்பதற்கு   “இப்பகுதியில்   தொல்காப்பியரால்   சுட்டி விளக்கப்பெறாத பிற நூல்களிற் கண்ட நால்வகை
வலியுள்  மூன்றென”  இளம்பூரணரும்,   “அறம்,   பொருள்   இன்பமென”-நச்சினார்க்கினியரும்  தம்முள்
மாறுபட்டு   இருவேறு   பொருள்  கூறுகின்றனர்.  இவை   அறுவகைப்   பிரிவிலடங்குதலானும்   கூறும்
தொகையால்  குறிக்கும்வகைகளை   நூலில்விளக்காது   சூத்திரிப்பது  நூன்   மரபாகாமையானும், ஈண்டுப்
பிரிவுவகை   மூன்றும்   விளக்கப்பட்டு    அவற்றை   அடுத்து  ‘மூன்றன்   பகுதி’  எனத்  தொகுத்துக்
கூறப்படுதலானும்,  இத்தொடர்  இச்சூத்திரத்தில்   தெளிக்கப்பட்ட   பிரிவுவகை  மூன்றனையே  குறிப்பது
விளக்கமாகும்.   இவ்வாறே  புறத்திணையியல்  (24)  “மாற்றரும்   கூற்றம்”   என்னும்  சூத்திரத்திடையில்
‘ஈரைந்தாகும்’ எனத் தொகுத்துப் பிரித்தும் காண்க.
  

பொருட்பிரிவுப்     பகுதிக்கண், ஒருபுறம்  பொருட்பிணியால்  பிரியவிரும்புதலும்,  அறுபுறம் காதலால்
பிரிவொல்லாது   செலவழுங்குதலுமாகத்   தம்முள்    முரண்படும்    இருவேறுணர்ச்சிகள்  தலைவன்பால்
நிகழுமியல்பை  விளக்கிய பகுதி நயந்து  பாராட்டற்பாலது.  நாளது சின்மையால்  பொருளீட்டும் விருப்பம்
காதல்  பெருக்கால் தகைக்கப்படுவதும்   அன்புபற்றித்   தலைவி   பொருட்டுப்  பொருளீட்டும் விருப்பம்
அவ்வன்பிற்குரிய    தலைவியின்   பிரிவருமையால்    தகைக்கப்படுவதும்,    இயல்பாதலின்    ஒன்றாப்
பொருள்வயின்