பக்கம் எண் :

350தொல்காப்பியம் - உரைவளம்

ஊக்கிய   பாலெனப்   பொருட்  பிரிவில்   தலைவன் உள்ளத்தில் நிகழும் விருப்பு தடையுணர்ச்சி முரண்
வலியுறுத்தப்பட்டது.
  

‘உரைத்திற    நாட்டம்  கிழவோன்மேன’   என்பதை  அப்பாற்  பட்ட  ஒரு   திறத்தானும்;  ஒன்றாப்
பொருள்வயின்   ஊக்கிய  பாலினும்,   ஊதியங்கருதிய   ஒருதிறத்தானும்,   தூதிடையிட்ட  வகையினானும்,
மூன்றன்   பகுதியும்,  வினைத்திறவகையினும்,   ஆங்கோர்  பக்கமும்,  இரத்தலும், தெளித்தலும்  எனவரும்
ஒவ்வொன்றோடும் தனித்தனி கூட்டுக.
  

பொருள்,     ஓதல்,  தூது,  பகை,  காவல்,  பரத்தை   என  அறுவகைப்பிரிவும்   வகைபெறக்கூறும்
இச்சூத்திரத்தில்  முதல்   மூன்றையும் ‘மூன்றவன்  பகுதியு’ மெனத் தொகுத்துப் பிரித்தார்; மற்ற மூன்றில்
பகை  காவலாகிய  இரண்டும்   தன்னளவிலும்   பரத்தை   தலைவி  அளவிலும்  பகைமை  சுட்டுதலால்
அம்மூன்றையும் வேறாக்கி, எண்ணும்மைகளை எல்லாம்  இறுதியில்  ஒடுக்கொடுத்துக்  கூட்டிப் பிரிவுவகை
ஆறும் விளக்கப்பட்டுள.
  

ஒன்றாத்     தமரினும்,  பருவத்தும்,  சுரத்தும்  என்பவற்றுள்   ஒவ்வொன்றின்  கண்ணும்  தலைவன்
வலித்தலும்  இயல்பாகும்.  அவை  வருமாறு  :-  ஒன்றாத்தமர்  உடன்படுமாறு  தலைமகன்  சான்றோரை
விடுத்தது கேட்ட தோழி கூற்றாகவரும்.
  

“எக்கர் ஞாழல் சிறியிலைப் பெருஞ்சினை
ஓதம் வாங்குந் துறைவன்
மாயோள் பசலை நீக்கின னினியே.”
   

என்னும்   ஐங்குறு   நூற்று  (145)  செய்யுளால்,  தலைதமர்  மகட்கொடைக்கு   ஒன்றாவழித்தலைவன்
உடன்கொண்ட கழியத் துணிதலுண்மை விளங்கும்.
  

“பெருநன் ருற்றிற் பேணாரு முளரே.
ஒருநன் றுடைய ளாயினும் புரிமாண்டு
புலவி தீர வளிமதி இலைகவர்
பாடமை யொழுகிய தண்ணறுஞ் சாரன்
மென்னடை மரையா துஞ்சு
நன்மலை நாட! நின்னல திலளே.”

(குறுந்-115)