பக்கம் எண் :

ஒன்றாத் தமரினும் பருவத்தும் சுரத்தும் சூ.44351

இக்குறுந்தொகைச்   செய்யுளில், ‘நன்மலை நாட நின்னலதிலளே’  எனத்தோழி  தலைவற்குக் கூறுதலால்
தலைவனுக்குத்   தலைவியைத்தரத்  தமர்  ஒன்றாமையும்  அதனால்  தலைவன்   கொண்டு  தலைக்கழிய
வலித்தலும் கூறப்பட்டது.1
  

இனி,  மணமறுத்த  ஒன்றாத்தமரை  உடன்படுத்தற்  பொருட்டுப்  பொருளீட்டக்  கருதித்  தலைவியை
விடுத்துப் பிரிவதற்குச் செய்யுள்:
  

“இலையிலஞ்சினை” எனும் (254-ஆம்) குறும்பாட்டில்,
  

“வாரா, தோழி- - - - - -
செய்பொருள் தால்நசைஇச் சென்றோர்
எய்தின ராலென வரூஉந் தூதே.”
   

எனப்பொருள் தேடித் தரச் செல்லும் தலைவன் பிரிவு கூறப்படுதலறிக.
  

“பொத்தில் காழி” எனும் (255) குறும்பாட்டிலும்,
  

“தங்கடனிறீஇய ரெண்ணி யிடந்தொறும்
காமர் பொருட்பிணிப் போகிய
நாம்வெங் காதலர் சென்றவாறே.”

 

எனத் தலைவன் பொருட்பிரிவு3 வருதலறிக.2
  

அப்பிரிவில் தலைவன் கூற்றுக்குச் செய்யுள் வந்துழிக் கண்டு கொள்க.
  

உடன்போக்கில்   வலித்துக்கொண்டு   செல்லும்   தலைவன்   தலைவிக்குச்  சுரத்திடக்  கூறுவதற்குச்
செய்யுள்:
  

“அழிவில முயலும் ஆர்வ மாக்கள்
வழிபடு தெய்வம் கட்கண் டாஅங்
  


1 புலவி  தீர  அனிமதி,  ‘நின்னலது  இவள்’  என்பனவற்றால்  உடன்போக்கை வற்புறுத்தி ஓம்படை
கூறியது என்க.
  

2 செய்யுளில் வருதலறிக.
  

3 தங்கடன்  நிறீஇயர் எண்ணி என்றது தாமீட்டிய பொருளால் வரைதல் தம் கடன் என்பதை நிறுத்த
எண்ணி எனப் பொருள்படலால் பொருள் வயிற் பிரிவைக் குறித்தது என்பது இவர் கருத்து.