கலமரல் வருத்தந்தீர யாழநின் நலமென் பணைத்தோள் எய்தின மாகலின், பொரிப்பூம் புன்கின் எழிற்றகை யொண்முறி சுணங்கணி வனமுலை அணங்குகொளத் திமிரி நிழல்காண் டோறும் நெடிய வைகி, மணல்காண் டோறும் வண்டல் தைஇ; வருந்தா தேகுமதி வாலெயிற் றோயே; மாநனை கொழுதி மகிழ்குயி லாலும் நறுந்தண் பொழில கானம், குறும்ப லூரயாம் செல்லு மாறே.” |
(நற்றிணை-9) |
“வருமழை சுரந்த வானிற விசும்பின் நுண்டுளி மாறிய உலவை யங்காட் டால நீழல் அசைவு நீக்கி, அஞ்சுவழி அஞ்சா தசைவழி யசைஇ, வருந்தா தேகுமதி வாலிழைக் குறுமகள்! இம்மென் பேரலர் நும்மூர்ப் புன்னை வீமல ருதிர்ந்த தேனாறு புலவிற் கான லார்மணன் மரீஇக் கல்லுறச் சிவந்தநின் மெல்லடி யுயற்கே.” |
(நற்றிணை-76) |
எனவரும் நற்றிணைச் செய்யுளுமதுவே. |
“புலிபொரச் சிவந்த புலாலஞ் செங்கோட் டொலிபன் முத்த மார்ப்ப வலிசிறந்தது வன்சுவற் புராஅரை முருக்கிக் கன்றொடு மடிப்பிடி தழீஇய தடக்கை வேழந் தேன்செய் பெருங்கிளை யிரிய வேங்கைப் பொன்புரை கவளம் புறந்தரு பூட்டு மாமலை விடரகங் கவைஇக் காண்வரக் கண்டிசின் வாழியோ குறுமகள்! நுந்தை அறுமீன் பயந்த அறஞ் செய் திங்கட் செல்சுடர் நெடுங்கொடி போலப் பல்பூங் கோங்கம் அணிந்த காடே.” |
என்னும் நற்றிணைப் (202) பாலை செய்யுளது. |
இனி, சுரத்தினதருமை கருதித் தலைவியை விடுத்தற்குச் செய்யுள்: |