“உமணர், சேர்ந்து கழிந்த மருங்கி னகன்றலை யூர்பாழ்த் தன்ன, வோமையம் பெருங்காடு இன்னா வென்றி ராயின் இனியவோ பெரும தமியோர்க்கு மனையே”. |
(குறுந்-124) |
இதில் “என்றிராயின்” என்பதால், விட்டுப்பிரியும் தலைவன் கூறியதைத் தோழிகொண்டு கூறினாளென்றறிக. இனி, விட்டுச் சென்ற தலைவன் இடைச்சுரத்துத் தலைவியை நினைந்து கூறற்குச் செய்யுள்: |
“எரிகவர்ந் துண்ட வென்றூழ் நீளிடைச் சிறிதுகண் படுப்பினுங் காண்கு வென்மன்ற நள்ளென் கங்குல் நளிமனை நெடுநகர் வேங்கை வென்ற சுணங்கிற் தேம்பாய் கூந்தன் மாஅ யோளே”. |
(ஐங்-324) |
“வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சில் குளவி மொய்த்த அழுகற் சின்னீர் வளையுடைக் கையள் எம்மொ டுணீஇய வருந்தில் லம்ம தானே அளியளோ அளியளென் நெஞ்சமர்ந் தோளே”. |
(குறுந்-56) |
இடைச்சுர மருங்கில் தமர்வர, தலைவன் அருளால் மறைதற்குச் செய்யுள்: |
“அன்றை யனைய வாகி யின்றுமெங் கண்ணுள் போகச் சுழலு மாதோ புல்லிதழ்க் கோங்கின் மெல்லிதழ்க் குடைப்பூ வைகுறு மீனின் இணையத் தோன்றிப் புறவணி கொண்ட பூநாறு கடத்திடைக் கிடினென விடிக்குங் கோற்றொடி மறவர் வடிநவில் அம்பின் வினையர் அஞ்சா தமரிடை யுறுதர நீக்கிநீர்! எமரிடை யுறுதர வொளிந்த காடே” |
(நற்-48) |