பக்கம் எண் :

ஒன்றாத் தமரினும் பருவத்தும் சுரத்தும் சூ.44355

எழுமா ணளக்கும் விழுநிதி பெறினும்,
கனங்குழைக் கமர்த்த சேயரி மழைக்கண்
அமர்ந்தினிது நோக்க மொடு செகுத்தனென்;

எனைய வாகுக வாழிய பொருளே.”

(நற்றிணை-16)
 

“வங்காக் கடந்த செங்காற் பேடை
எழாலுற வீழ்ந்தெனக் கணவற் காணாது
குழலிசைக் குரல குறும்பல அகவும்
குன்றுறு சிறுநெறி அரியவென் னாது
மறப்பருங் தாதலி யொழிய
இறப்பல் என்பதீண் டின்மைக்கு முடிவே.” 
 

(குறுந்-151)
 

எனும் குறுந்தொகைச் செய்யுளுமது.
  

பொருள் வலிக்கும் நெஞ்சுக்கு அதனொடு பொருந்தா
  

இளமையதருமை தலைவன் கூறற்குச் செய்யுள்:
  

‘பைங்காய் நல்லிட மொரீஇ’ என்னும் நற்றிணைச் செய்யுளில்,
  

“..........................பாழ்நாட் டத்தம்
இறந்துசெய் பொருளும் இன்பம் தருமெனில்
இளமையிற் சிறந்த வளமையு மில்லை,

இளமை கழிந்த பின்றை வளமை
காமந் தருதலு மின்றே; அதனால்
நில்லாப் பொருட் பிணிச் சேறி
வல்லே நெஞ்சம் வாக்கநின் வினையே.”
 

(நற்-126)
 

எனத்தலைவன் கூறுதல் காண்க. இன்னும், ‘அருவியார்க்கும்,’ எனும் நற்றிணைச் (205) செய்யுளில்,
  

“துன்னருங் கானம் என்னாய் நீயே;
குவளை யுண்கண் இவளீண் டொழிய
ஆள்வினைக் ககறி யாயின், இன்றொடு
போயின்று கொல்லோ தானே..............

ஆய்நிறம் புரையுமிவள் மாமைக் கவினே.”

 

என வருவது மது.