“முதிர்ந்தோ ரிளமை ஒழிந்தும் எய்தார்; வாழ்நாள் வகையளவு அறிஞரு மில்லை; ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... கருங்கண் வெம்முலை ஞெழங்கப் புல்லிக் கழிவதாக கங்குல்.” |
(நற்-314) |
என்று தலைவன் கூறியதைத் தலைவி எடுத்துக் கூறும் செய்யுளில் இளமையதருமையும் நாளது சின்மையும் தம்முள் ஒன்றாது முரணுதலைக் காண்க. |
தாளாண்மையால் பொருள் வலிக்கும் நெஞ்சிற்குத்தலைவி தகுதி நோக்கித் தலைவன் பிரிவருமை கூறுதற்குச் செய்யுள் |
“வினையே ஆடவர்க் குயிரே, வாணுதல் மனையுறை மகளிர்க் காடவ ருயிரென நமக்குரைத் தோரும் தாமே; அழாஅல், தோழி! அழுங்குவர் செலவே.” |
இக் குறுந்தொகை (135) செய்யுளில் தோழிகொண்டு கூறிய தலைவன் கூற்றால், ஆடவர்க்குத் தாளாண்பக்கம் இன்றிய மையாதென்பதும், மனையற மகளிரின் தகுதி பேணுதல் அவ்வாடவர் கடனென்பதும், இவ்வாறு இரு வேறுணர்ச்சி தம்முள் ஒன்றாப் பொருட்பிணியின் கண் தலைவற்குக் கூற்று நிகழுமென்பதும் காண்க. |
இன்னும் |
“ஆறுசெல் வருத்தத்துச் சீறடி சிவப்பவும் சினைநீங்கு தளிரின் வண்ணம் வாடவுந் தான்வரல் துணிந்த இவளினும், இவளுடன் வேய்பயில் அழுவம் உவக்கும் பேதை நெஞ்சம் பெருந்தக வுடைத்தே.” |
(பொருள்-சூ-41. நச்சினார்-உரைமேற்கோள்) |
என்னும் பொருளதிகாரச் சூத்திரம் 41ன் உரைமேற்கோள் செய்யுளாலும், ஒன்றாப் பொருட்பிணியில் தலைவியின் பிரிவருமை தலைவன் கூறுவதறிக. |
இனி, இன்மைய திளிவும் உடைமையை துயர்ச்சியும் கருதித் தலைவன் கூறுதற்குச் செய்யுள்: |
“ஈதலும் துய்த்தலும் இல்லோர்க் கில்லெனச் செய்வினை கைம்மிக எண்ணுதி; அவ்வினைக் |