கம்மா அரிவையும் வருமோ! எம்மை யுய்த்தியோ! உரைத்திசி னெஞ்சே” |
(குறுந்-63) |
இச்செய்யுளில் ‘இல்லோர்க்கில்லெனச் செல்வினை கைம்மிக எண்ணுதி’ என்பதால் இன்மையதிளிவும், ‘அம்மா அரிவையும் வருமோ’ என்றதால் உடைமையாம் காதலின் உயர்வும், தம்முள் ஒன்றாமை தன் நெஞ்சிற்குத் தலைவன் கூறிச்செலவு தவிர்வது காண்க. |
இனி, இவ்வாறு செலவழுங்காமல் தலைவன் பிரிதலும உண்டு: அதற்குச் செய்யுள்: |
“இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும் அசையுட னிருந்தோர்க் கரும்புணர் வின்மென வினைவயிற் பிரிந்த வேறுபடு கொள்கை, அரும்பவி ழலரிச் சுரும்புண் பல்போ தணிய வருதுநின் மணியிருங் கதுப்பென- எஞ்சா வஞ்சினம் நெஞ்சுணக் கூறி. மைசூழ் வெற்பின் மலைபல இறந்து செய்பொருட் ககன்ற செய்தீர் காதலர் கேளார் கொல்லோ, தோழி! ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...............கார்ப் பெயற் குரலே.” |
எனவரும் நற்றிணைச் (214) செய்யுளில் இவ்வாறு ஒன்றாப் பொருள்வயின் மாறுபட்டலைக்கும் உணர்ச்சி முரண் கூறித் தலைவன் ஒன்றாப் பொருள்வயிற் பிரிந்தமையும் காண்க. “அரிதாய அறனெய்தி அருளியோர்க்களித்தலும்” எனும் பாலைக் கலியுமதுவே. (பாலைக்கலி-11) |
அன்புமிகையால் மனைமாட்சிக்குப் பொருள் வலித்தலும் தலைவியிற் பிரிவருமையால் செல்லத்துணியாமையுமாகிய ஒன்றாப் பொருட்பிணிக்குச் செய்யுள்: |
“மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை இரும்பனம் பசுங்குடை பலவுடன் பொதிந்து |