4. பாயிரத்துள் எல்லை கூறியவர் பனம் பாரனார் அவர் கூறியது வடவேங்கடம்........ நல்லுலகம்’ என்பது தொல்காப்பியர் ஈண்டுஎல்லை கூறவில்லை; உரிப்பொருள்களுக்கு நிலப்பிரிவு கூறினார் அவ்வளவே. பாயிரம் செய்வார் கூற்று நூலாசிரியர்க்கும் உடன்பாடு ஆம். ஆதலின் பாயிர ஆசிரியர் கூற்றாகவும் கூறுதல் மரபு எனக் கொண்டால் பின் வருமாறு கருத்துக் கொள்ளலாம். தமிழ்கூறு நல்லுலகத்து எல்லையாக வடவேங்கடம் தென்குமரியைக் கூறிய ஆசிரியர் தமிழ் ஒழுகலாற்று உரிப்பொருள் நிகழ்ச்சிக்கும் குறிஞ்சி முதலிய நிலங்களைக் கூறினார் ஏனெனின் புறநாட்டிருந்து செய்யுள் செய்வாரும் உரிப்பொருள் நிலப்பகுப்பினைத் தாம் கூறியவாறே கூற வேண்டும் என்பதற்காகவே என்க. 5. புறம் - புறத்திணைப்பாற்படும். 6. அவற்றோடு ஒப்பச் சேறலாவது குறிஞ்சி முதலிய உரிப் பொருள்கள் போலத் தானும் (பாலையும்) ஓத்த நிலையில் செய்யுளில் ஆளப்படுதல். |