பக்கம் எண் :

360தொல்காப்பியம் - உரைவளம்

இனி, பாசறைப் புலம்பல் வருமாறு:
  

“புகழ்சால் சிறப்பிற் காதலி புலம்பத்
துறந்துவந் தனையே, அருந்தொழிற் கட்டூர்
நல்லேறு தழீஇ நாகுபெயர் காலை
உள்ளு தொறுங் கலிழு நெஞ்சம்!

வல்லே எம்மையும் வரவிழைத் தனையே.”
  

(ஐங்-445)
 

வினை முற்றிய தலைமகன் பாகனொடு விரும்பிக் கூறுதற்குச் செய்யுள்:
  

“விருந்தின் மன்னர் அருங்கலம் தெறுப்ப
வேந்தனும் வெம்பகை தணிந்தனன் தீம்பெயற்
காரு மார்கலி தலையின்று; தேரும்
ஓவத் தன்ன கோபச் செந்நிலம்
வள்வா யாழி உள்ளுறு புருளக்
கடவுக, காண்குவம், பாக!... ... ...”

(அகம்-54)
 

காவலுக்குப்  பிரிந்த  தலைவன் தான்  வருவதாய்த்  தலைவிக்குத்  தூதனுப்பியது:-“ஒருகுழை  ஒருவன்
போல” என்னும் பாலைக்கலியில்,
  

“ஒல்குபு நிழல் சேர்ந்தார்க் குலையாது காத்தோம்பி
வெல்புகழ் உலகேத்த விருந்துநாட் டுறைபவர்

- - - - - - - - - -  - - - -
- - - - - -  - - - - - - - - நம் காதலர்

வருமென வந்தன்றவர் வாய்மொழித் தூதே.”
  

(கலி-25)
 

இனி,   பரத்தையினகற்சியில்  பரிந்த   தலைமகளிடத்துத்  தலைவன்  இரத்தலும்,   தெளித்தலும்   என
இருவகையினும் கூற்று நிகழ்தற்குச் செய்யுள்:
  

‘ஒரூஉ, கொடியியல் நல்லார்’ என்னும் மருதக்கலியில்,
 

“ஆயிழாய் நின்கண் பெறினல்லால் இன்னுயிர் வாழ்கல்லா
என்கண் எவனோ தவறு”
 

எனவும்,
 

“அதுதக்கது, வேற்றுமை என் கண்ணே ஓராதி தீதின்மை
தேற்றக்கண் டீயாய் தெளிக்கு;”  

(மருதக்கலி-88)