பக்கம் எண் :

எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே சூ.45361

எனவும் தலைவன் தலைவியிடம் இரந்தும் தெளித்தும் கூறுதலும்,
  

இனித் தேற்றேம்யாம்
   

“தேர்மயங்கி வந்த தெரிகோதை அந்நல்லார்
தார்மயங்கி வந்த தவறஞ்சிப் போர்மயங்க

நீகூறும் பொய்ச்சூள் அணங்காயின் மற்றினி
யார்மேல் விளியுமோ கூறு.”

(கலி-88)
 

எனக் கூறித் தலைவி ஊடல் தணிதலும் வந்தமை காண்க.
  

“நில்லாங்கு நில்லாங்கு” என்னும் மருதக்கலியுள்
 

“ஆயிம் ஆயிழாய் அன்னவை யானாங் கறியாமை
போற்றிய நினைத் தொடுகு.”   

(கலி-95)
 

எனத் தன் பரத்தமைக்குப் புலந்த தலைவியைத் தெளிக்கு முகத்தானும்,
  

“நல்லாய்! பொய்யெல்லாம் ஏற்றித் தவறு தலைப்பெய்து
கையொடு கண்டாய், பிழைத்தே னருளினி.”
  

(மருதக்கலி-95)
 

என இரக்கு முகத்தானும், தலைவன் கூற்று நிகழ்த்தியது காண்க.
  

45.

எஞ்சி யோர்க்கும் எஞ்சுதல் இலவே.  (45)
 

ஆ. மொ. இல.
  

The act of expression is not prohibited
to others also who are not specifically
mentioned here.
  

இளம்பூரணர்
  

45. “எஞ்சி யோர்க்கு மெஞ்சுதல் இலவே”
  

இது  காறும்  பிரிவின்  கண்  கூறுதலுரியார் பலருள்ளும் நற்றாயும் செவிலியும் கண்டோரும் தோழியும்
தலைமகனும் கூறுங்கூற்றுக் கூறினார். இஃது அவரை யொழிந்த தலை