‘பாங்கர் முதலாயினாரை இச்சூத்திரத்தாற் கூறுப; தலை மகள் கூற்றுத் தனித்துக் கூறல் வேண்டும், இவரோடு, ஒரு நிகரன்மையின், ‘எனின், ஒக்கும். தலைமகள் கூற்று உணர்த்திய சூத்திரம் காலப் பழமையாற் பெயர்த்தெழுதுவார் விழ எழுதினார் போலும். ஆசிரியர் இச்சூத்திரத்தானும் பொருள் கொள்ளவைத்தமையின், தலைமகள் கூற்று வருமாறு. தலைமகள் பிரிதலுற்ற தலைமகன் குறிப்புக்கண்டு கூறுதலும் பிரிவுணர்ந்து கூறுதலும், பிரிவுணர்த்திய தோழிக்குக் கூறுதலும், உடன் போவல் எனக் கூறுதலும், இடைச்சுரத்து ஆயத்தார்க்குச் சொல்லிவிட்டனவும், தமர்வந்துற்றவழிக் கூறுதலும் மீளலுற்றவழி ஆயத்தார்க்குக் கூறிவிட்டனவும், பிரிவாற்றாமையும், ஆற்றுவல் என்பது படக் கூறுதலும், தெய்வம் பராவலும், பருவங்கண்டு கூறுதலும் வன்புறை எதிரழிந்து கூறுதலும் இவையெல்லாம் கூறப்படும். |