பிரிவுணர்ந்த தலைமகள் தலைமகனுடன் கூறியதற்குச் செய்யுள். |
“செவ்விய தீவிய சொல்லி அவற்றொடு பைய முயங்கிய அஞ்ஞான் றவையெல்லாம் பொய்யாதல் யான்யாங் கறிகோமற் றைய அகனகர் கொள்ளா அலர்தலைத் தந்து பகன்முனி வெஞ்சுரம் உள்ளல் அறிந்தேன் மகனல்லை மன்ற இனி; செல்லினிச் சென்றுநீ செய்யும் வினைமுற்றி அன்பற மாறியாம் உள்ளத் துறந்தவள் பண்பும் அறிதிரோ என்று வருவாரை என்திறம் யாதும் வினவல் வினவின் பகலின் விளங்குநின் செம்மல் சிதையத் தவலருஞ் செய்வினை முற்றாமல் ஆண்டோர் அவலம் படுதலும் உண்டு”. |
(கலி-பாலை-18) |
பிரிவுணர்த்திய தோழிக்குக் கூறியதற்குச் செய்யுள் |
“அருளும் அன்பும் நீக்கித் துணைதுறந்து பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின் உரவோர் உரவோர் ஆக மடவம் ஆக மடந்தை நாமே”. |
(குறுந்-20) |
“செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை” |
(குறள்-1151) |
என்பதும் அது. |
உடன் போக்கு ஒருப்பட்டதற்குச் செய்யுள், |
“சிலரும் பலருங் கடைக்கண் நோக்கி மூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி மறுகிற் பெண்டிர் அம்பல் தூற்றச் சிறுகோல் வலந்தனள் அன்னை அலப்ப அலந்தனென் வாழி தோழி கானற் புதுமலர் தீண்டிய பூநாறு குரூஉச்சுவற் கடுமா பூண்ட நெடுந்தேர் கடைஇ நடுநாள் வரூஉ மியறேர்க் கொண்கனொடு |