செலவயர்ந் திசினால் யானே அலர்சுமந் தொழிகஇவ் வழுங்கல் ஊரே”. |
(நற்றிணை-149) |
இடைச்சுரத்து ஆயத்தார்க்குச் சொல்லிவிட்டதற்குச் செய்யுள் |
“சேட்புல முன்னிய விரைநடை அந்தணிர் நும்மொன் றிரந்தனென் மொழிவல் எம்மூர் யாய்நயந் தெடுத்த ஆய்நலங் கவின ஆரிடை இறந்தனள் என்மின் நேரிடை முன்கைஎன் ஆயத் தோர்க்கே” |
(ஐங்குறு-384) |
“கடுங்கட் காளையொடு நெடுந்தேர் ஏறிக் கோள்வல் வேங்கைய மலைபிறக் கொழிய வேறுபல் அருஞ்சுரம் இறந்தனள் அவளெனக் கூறுமின் வாழியோ ஆறுசெல் மாக்கள் நற்றோள் நயந்துபா ராட்டி எற்கெடுத் திருந்த அறனில் யாய்க்கே.” |
(ஐங்குறு-385) |
தமர் வந்துற்றவழிக் கூறியதற்குச் செய்யுள் |
“அறஞ்சா லியரோ அறஞ்சா லியரோ வறனுண் டாயினும் அறஞ்சா லியரோ வாள்வனப் புற்ற அருவிக் கோள்வல் என்னையை மறைத்தகுன்றே.” |
(ஐங்குறு-312) |
மீண்டு வருவாள் ஆயத்தார்க்குக் கூறிவிட்டதற்குச் செய்யுள் |
“கவிழ்மயி ரெருத்திற் செந்நா யேற்றை குருளைப் பன்றி கொள்ளாது கழியும் சுரநனி வாரா நின்றனள் என்பது முன்னுற விரைந்தநீர் உரைமின் இன்னகை முறுவல் என்ஆயத் தோர்க்கே.” |
(ஐங்குறு-397) |