பக்கம் எண் :

எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே சூ.45365

பிரிவாற்றாமைக்குச் செய்யுள்
  

“அரிதரோ தேற்ற மறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான்.”
 

(குறள்-1153)
 

“அஞ்சுவல் வாழி தோழி சென்றவர்
நெஞ்சுணத் தெளித்த நம்வயின்
வஞ்சஞ் செய்தல் வல்லின வாறே.”
 
   

“அரும்பெற்ற காதல ரகலா மாத்திரம்
இரும்புதல் ஈங்கை இளந்தளிர் நடுங்க
அலங்குகதிர் வாடையும் வந்தன்று
கலங்கஞர் எவ்வந் தோழிநாம் உறவே.”

 

இவை பிரிந்தார் என்றவழிக் கூறியன.
  

ஆற்றுவல் என்பதுபடக் கூறியதற்குச் செய்யுள்
  

“தோளுந் தொடியும் நெகிழ்ந்தன நுதலும்
நெய்யுகு பள்ளி யாகுக தில்ல
யானஃ தவலங் கொள்ளேன் தானஃ
தஞ்சுவரு கான மென்றதற்
கஞ்சுவல் தோழி நெஞ்சத் தானே.”
 

தெய்வம் பராஅயதற்குச் செய்யுள்
 

“புனையிழாய் ஈங்குநாம் புலம்புறப் பொருள் வெஃகி
முனையென்னார் காதலர் முன்னிய ஆற்றிடைச்
சினைவாடச் சிறக்குநின் சினந்தணிந் தீகெனக்
கனைகதிர்க் கனலியைக் காமுறல் இயைவதோ”.

(கலி.பாலை-15)
 

பருவங்கண்டு கூறியதற்குச் செய்யுள்
   

“என்னொடு புலந்தனர் கொல்லோ காதலர்
மின்னொடு முழங்குதூ வானம்
நின்னொடு வருவதும் எனத்தெளித் தோரே”.

  

வன்புறை எதிரழிந்து கூறியதற்குச் செய்யுள்
 

வெறுக்கைக்குச் சென்றார் விளங்கிழாய் தோன்றார்.