பக்கம் எண் :

366தொல்காப்பியம் - உரைவளம்

“பொறுக்கவென் றாற்பொறுக்க லாமோ-ஒறுப்பபோற்
பொன்னுள் உறுபவளம் போன்ற புணர்முருக்கம்
என்னுள் உறுநோய் பெரிது”-  
  

(திணைமாலை-67)
 

தூதுவிடக் கூறியதற்குச் செய்யுள்
   

“காண்மதி பாணநீ உரைத்தற் குரியை
துறைகெழு கொண்கன் பிரிந்தென
இறைகேழ் எவ்வளை நீங்கிய நிலையே.”  

(ஐங்குறு-140)
 

ஆயத்தார் கூறியதற்குச் செய்யுள்
   

“மாந்தர் மயங்கிய மலைமுதற் சிறுநெறி
தான்வரும் என்ப தடமென்தோழி
அஞ்சினள் அஞ்சினள் ஒதுங்கிப்
பஞ்சு மெல்லடிப் பரல்வடுக் கொளவே.”
 

பாணர் கூறியதற்குச் செய்யுள்
   

“நினக்கியாம் பாணரும் அல்லேம் எமக்கு
நீயுங் குருசிலை அல்லை மாதோ
நின்வெங் காதலி நன்மனைப் புலம்பி
ஈரிதழ் உண்கண் உகுத்த
பூசல் கேட்டும் அருளா தோயே.”

(ஐங்குறு-480)
 

பார்ப்பார் கூறியதற்குச் செய்யுள்
   

“துறந்ததற் கொண்டு துயரடச் சாஅய்
அறம்புலந்து பழிக்கும் அளைக ணாட்டி
எவ்வ நெஞ்சிற் கேம யாக
வந்தன ளேநின் மடமகள்
வெந்திறல் வெள்வேல் விடலைமுந் துறவே.”
  

(ஐங்குறு-393)
 

நச்சினார்க்கினியர்
  

45. எஞ்சி....................இலவே
  

இது முன்னர்க் கூற்றிற்கு உரியரெனக் கூறாதோர்க்குங் கூற்று விதித்தலின் எய்தாத தெய்துவித்தது.