“காலே பரிதப் பினவே கண்ணே நோக்கி நோக்கி வாளிழந் தனவே யகலிரு விசும்பின் மீனினும் பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே”. |
(குறுந்-44) |
இது குறுந்தொகை, செவிலி கடத்திடைத் தன்நெஞ்சிற்குச் சொல்லியது. |
“இடிதுடிக் கம்பலையு மின்னாத வோசையு மிசையினாராக் கடுவினை யாளர் கடத்திடைப் பைங்குரவே கவன்று நின்றாப் நெடுவினை மேற்செய்த வெம்மேபோ னீயும் படுசினைப் பாவை பறித்துக் கேட்பாட்டாயோ பையக் கூறாய்”. |
இது செவிலி குரவொடு புலம்பியது. |
“தான்றாயாக் கோங்கந் தளர்ந்து முலைகொடுப்ப வீன்றாய் நீ பாவை யிருங்குரவே-யீன்றாண் மொழிகாட்டா யாயினு முள்ளெயிற்றாள் சென்ற வழிகாட்ட யீதென்று வந்து”. |
(திணை-மாலை-நூற்-65) |
இது குரவே வழிகாட்டென்றது. |
“குடம்புகாக் கூவல் குடிக்காக்குஞ் சின்னீ ரிடம்பெறா மாதிரி மேறாநீ ரத்த முடம்புணர் காத லுவப்ப விறந்த” |
தடம்பெருங் கண்ணிக்கு யான்றாமையை காண்க. |
இது நீயாரென்று வினாயினார்க்குச் செவிலி கூறியது இன்னும் வேறுபட வருவனவெல்லாம் இதனான் அமைத்துக் கொள்க. |
இனித் தலைவிகூற்று நிகழுமாறு: |
பைபயப் பசந்தன்று நுதலுஞ் சாஅய் ஐதா கின்றென் தளிர்புரை மேனியும் பலரும் அறியத் திகழ்தரும் அவலமும் உயிர்க்கொடு கழியின் அல்லதை நினையின் எவனோ வாழிதோழி பொரிகால்; |