பாரதியார் | 2. அவற்றுள்...... பண்பே | கருத்து:- இது மேற்குறித்த திணைஏழனுள், தமக்கென நில உரிமையுடையன நான்கெனக் குறிக்கின்றது. | பொருள்:- அவற்றுள் நடுவணைந்திணை - முன்னைச் சூத்திரத்துட் கூறிய எழுதிணைகளுள் முதலுங்கடையுமான கைக்கிளை பெருந்திணைகளை நீக்கி, நடுநின்ற முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் ஐந்திணை; | நடுவணதொழிய = தம்முள் நடுவுநிலைத்திணையாகிய (பாலை) யொழிய படுதிரைவையம் பாத்திய பண்பே - கடல் சூழ்ந்த நிலத்தைப் பகுத்தஇயல்பிற்று. | குறிப்பு:- இதில் ஐந்திணை - எழுவாய் பாத்திய பண்பே பயனிலை; ‘ஒழிய’ என்னும் வினையெச்சம் ‘பாத்திய’ எனும் பெயரெச்சங்கொண்டும், அப்பெயரெச்சம் ‘பண்பே’ எனும் பெயர் கொண்டும் முடிந்தன. வையம், பாத்திய என்னும் வினைக்குச் செயப்படுபொருள் வையம் ‘நானிலம்’ எனப்படுதலானும் அது குறிஞ்சி முல்லை மருதம் நெய்தலெனத் திணைக்குரிய நிலத்தியல்பு பற்றிப் பகுக்கப்படுதலானும், பாலைக்குத் தனக்குரிய நிலம் பிறிதின்மையானும், முல்லை முதல்நெய்தலீறான நிலங்களையே அவ்வகத்திணைக்களனாகப் பொருள் நூலுடையார் கொள்ளுதலானும் வையத்தை நாற்கூறாகப் படுத்த இயல்புடைத்து பாலையொழிந்த நாலுதிணையும் என்பதை இச்சூத்திரம் விளக்கிப்போந்தது. இதனால் திணையே அகவுரிப் பொருளாய், அதற்குப் பொருந்த நிலம் பிரிவு கொண்டது என விளக்கப்பட்டது. | சிவலிங்கனார் | இச் சூத்திரத்திற்குப் பொருள் காண்பதில் உரையாளர்கள் ஒன்று படுகின்றனர். ஆனால் கொண்டு கூட்டில் வேறுபடுகின்றனர். |
|
|