பக்கம் எண் :

நிகழ்ந்தது நினைத்தற்கு ஏதுவும் ஆகும் சூ.46377

நிகழ்ந்தது  நினைத்தற்கு  ஏதும்  ஆகும்.  (46) முன்பு நிகழ்ந்தது பின்பு விசாரித்தற்கு ஏதுவும் ஆகும்.
உம்மை எதிர்மறை.
 

“வேர்பிணி வெதிரத்துக் கால்பொரு நரலிசை
கந்துபிணி யானை அயாவுயிர்த் தன்ன
என்றூழ் நீடிய வேய்பயில் அழுவத்துக்
குன்றூர் மதியம் நோக்கி நின்றுநினைந்து
உள்ளினேன் அல்லனோ யான்முள் எயிற்றுத்
திலகந் தைஇய தேங்கமழ் திருநுதல்
எமது முண்டோர் மதிநாட் டிங்கள்
உரறுகுரல் வெவ்வளி எடுப்ப நிழறப்
உலவை யாகிய மரத்த
கல்பிறங்கு மாமலை உம்பரஃ தெனவே.”
1

(நற்றிணை-62)

(46)
 

நச்சினார்க்கினியர்
  

46. நிகழ்ந்தது...............ஆகும்.
 

இதுவும் பாலையாதோர் இலக்கணங் கூறுகின்றது.
   

(இ-ள்) முன்னர் நிகழ்ந்ததொரு நிகழ்ச்சி பின்னர் நினைத்தற்குரிய நிமித்தமாம் என்றவாறு.
 

என்றது,  முன்னர்த்  தலைவன்கண்  நிகழ்ந்ததொரு  நிகழ்ச்சி  பின்னர்த்  தலைவன்  நினைத்தற்கும்
ஏதுவுமா மென்றவாறாம்:
 

உம்மை எச்சவும்மையாதலிற் கூறுதற்குமாம் என்று கொள்க.
 

“நுண்ணெழின் மாமைச் சுணங்கணி யாகந்தங்
கண்ணொடு தொடுத்தென நோக்கியு மமையாரென்
  


1 இடைச்சுரத்துத்   தலைவன்   முன்   ஒருகால்   இப்படிப்   பிரிந்துவந்தபோது   தலைவியின்  முக
உருவெளித் தோற்றம் கண்டமையை நினைந்து இப்போது தன் நெஞ்சுக்குக் கூறியது இச்செய்யுள். “முன்
ஒருகால்  பிரிந்து  வந்தபோது குன்றூர்  மதியம்  நோக்கி,  மதிநாள் திங்கள் எம்முடையதும் மாமலை
உம்பரிடத்து உண்டு என நினைந்து உள்ளினேன்” எனத் தலைவன் தன் நெஞ்சுக்கு முன் நிகழ்ந்ததைக்
கூறினான்.